Site icon ITamilTv

“ஆவின் நெய் விலை உயர்ந்தாலும் தனியார் விலையை விட கம்மி தான்.. இதில் அண்ணாமலை பேச எந்த உரிமையும் இல்லை – மனோ தங்கராஜ்!!

Spread the love

தனியார் நெய் 960 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது என்றும், ஆனால் ஆவின் நெய் விலை உயர்த்தப்பட்டாலும் 700 ரூபாய்க்கு தான் விற்பனை செய்யப்படுவதாகவும் அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் அண்ணாவின் 115ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்ட திமுக சார்பில் இன்று தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவில் வடசேரி பகுதியில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அவருடன் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் உட்பட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ்,

“தனியார் நெய் விலையை விட ஆவின் நெய் விலைக்குறைவாக தான் விற்கப்படுகிறது.

தனியார் நெய் 960 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் அதிகபட்சமாக விலை உயர்த்திய பிறகு தான் 700 ரூபாய்க்கு ஆவின் நெய் விற்பனை செய்யப்படுகிறது.

தன்னை விவசாயி மகன் என்று கூறும் அண்ணாமலைக்கு, விவசாய பெருங்குடி மக்களுக்கு உரிய விலை கொடுக்க வேண்டாமா? என்பது குறித்து தெரியாதா?

தனியார் நெய் என்ன விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்று அண்ணாமலைக்கு தெரியாதா? என்றும் கேள்வி எழுப்பினார். மேலும், ஆவின் நெய் விலை உயர்வு குறித்து அண்ணாமலை பேச எந்த தார்மீக உரிமையும் கிடையாது” என்றும் கூறியுள்ளார்.


Spread the love
Exit mobile version