ITamilTv

Minister Ponmudi | ”மிஸ் அடிக்கிறாங்க..” குழந்தை புகாரால் ஷாக்கான அமைச்சர் பொன்முடி.. நடந்தது என்ன?

Spread the love

குழந்தைகள் மையத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களை அடிப்பதாக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடியிடம் புகார் அளித்த குழந்தையால் பரப்பரப்பை ஏற்படுத்தியது. 

விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட எடையப்பட்டு என்ற கிராமத்தில் ரூபாய் 9 லட்சம் மதிப்பில் புதிய குழந்தைகள் மையத்தை அமைச்சர் பொன்முடி குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

பின்னர் குழந்தைகள் மையத்தில் படிக்கும் குழந்தைகளிடம் உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பேசிக் கொண்டிருந்தபோது இரண்டு குழந்தைகள் அமைச்சரிடம் தங்களை ஆசிரியர்கள் அடிப்பதாக புகார் கூறியதால்,

சிரித்துக் கொண்டே ஆசிரியர்களிடம் இனிமேல் குழந்தைகளை அடிக்கக்கூடாது என தெரிவித்த உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி புகார் தெரிவித்த குழந்தைகளிடமும் இனிமேல் ஆசிரியர்கள் உங்களை அடிக்க மாட்டார்கள் என உறுதி அளித்த நிகழ்வு அரங்கேறியது.


Spread the love
Exit mobile version