Site icon ITamilTv

MLA Lasya Nandita கார் விபத்தில் உயிரிழப்பு

MLA Lasya Nandita

MLA Lasya Nandita

Spread the love

தெலுங்கானா (MLA Lasya Nandita) எம்.எல்.ஏ லாஸ்யா நந்திதா நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

தெலங்கானா: பி.ஆர்.எஸ். கட்சியின் செகந்திராபாத் கண்டோன்மென்ட் எம்.எல்.ஏவாக இருப்பவர் லாஸ்யா நந்திதா .

37 வயதாகும் இவர் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இளம் வயதிலேயே அரசியல் களம் புகுந்தவர்.

இந்நிலையில் BRS கட்சியின் எம்.எல்.ஏவாக தனது பணியை சீரும் சிறப்புமாக செய்து வந்த லாஸ்யா நந்திதா இன்று காலை ஹைதராபாத் ஓஆர்ஆர் படான் செருவு அருகே தனது கார் ஓட்டுநருடன் சென்றுகொண்டிருந்தார்.

அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலைத் தடுப்பு மீது மோதி பயங்கர விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த MLA Lasya Nandita சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் .

பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிய கார் ஓட்டுநர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 10 நாட்களுக்கு முன்பு  நார்கட்பள்ளி அருகே செர்லபள்ளி என்ற இடத்தில் நடந்த சாலை விபத்தில் எம்.எல்.ஏ லாஸ்யா நந்திதா தப்பினார்.

அப்போது அவர் பயணித்த கார் மீது ஆட்டோ மோதியதில், அவரது தலையில் காயம் ஏற்பட்டது

10 நாட்களில் இரண்டாவது விபத்தில் தெலங்கானாவில் பாரத ராஷ்ட்ரிய சமிதி எம்.எல்.ஏ. லாஸ்யா நந்திதா உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது .

கன்டோன்மென்ட் தொகுதி எம்எல்ஏவாக இருந்த சயன்னா ஓராண்டுக்கு முன்பு இறந்தததால் அவரது மகள் லாஸ்யா நந்திதாவுக்கு பாரத ராஷ்ட்ரிய சமிதி கட்சி சீட் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

Also Read : https://itamiltv.com/the-ipl-schedule-for-the-current-year-has-been-released/

கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி தான் லாஸ்யாவின் தந்தையின் முதலாமாண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது அதிலிருந்து 4 நாட்களில் மகள் மரணமடைந்தது அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து தற்போது மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள நந்திதாவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த அரசியல் தலைவர்கள் பலரும் நேரில் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

இதையடுத்து அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Spread the love
Exit mobile version