தொலைத்தொடர்பு நிறுவனங்கள், ‘பிரி பெய்டு மற்றும் போஸ்ட் பெய்டு ரீசார்ஜ்’ கட்டணங்களை, அடுத்த ( Mobile recharge ) மாதத்தில் உயர்த்த உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது .
நாட்டில் முன்னணி டெலிகாம் நிறுவனங்கள், 4ஜி மற்றும் 5ஜி சேவையை வழங்கி வருகின்றன. ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள், பல்வேறு பகுதிகளில் 5ஜி சேவை துரிதமாக வழங்கி வருகின்றன. வோடபோன் நிறுவனம் விரைவில், 5ஜி சேவை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .
Alslo Read : சென்னை ஐஐடி வடிவமைத்த ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது..!!
கடந்த 2021ம் ஆண்டு இறுதியில் டெலிகாம் நிறுவனங்கள், 20 சதவீதம் வரை ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர்.
இந்நிலையில் லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான பின், ஏர்டெல், ஜியோ, வோடபோன் நிறுவனங்கள் தங்களது ரீசார்ஜ் கட்டணத்தை, 10 முதல் 17 சதவீதம் வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது .
5ஜி உள்கட்டமைப்புக்காக, டெலிகாம் நிறுவனங்கள் அதிக முதலீடுகள் செய்துள்ளதாகவும் ( Mobile recharge ) அதனை ஈடுகட்டும் வகையில், விரைவில் ரீசார்ஜ் கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.