தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது..
“கடந்த 4ஆம் தேதி வங்கக்கடலில் உருவான தீவிர புயலான மிக்ஜாம், தமிழ்நாட்டை ஒட்டிச் சென்றதால், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் அதிக கனமழையை கொட்டித் தீர்த்தது.
தொடர்ந்து, மிக்ஜாம் புயலானது ஆந்திர மாநிலத்தை நெருங்கியவுடன் நெல்லூர், ஓங்கோல் உள்ளிட்ட இடங்களிலும் மழை வெளுத்து வாங்கியது.
இந்நிலையில், இன்று (06.12.23) ஓங்கோல் அருகே பாபட்லா என்ற இடத்தில் மிக்ஜாம் புயல் கரையை கடந்துள்ளது.
இதனிடையே தற்போது திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர் ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.