அமெரிக்காவில் பச்சிளம் குழந்தையை ஆன்லைனில் விற்பனை செய்ய முயன்ற தாய் அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றான டெக்சாஸில் குழந்தை பிறந்த சில மணி நேரங்களிலேயே, அதை ஆன்லைனில் விற்பனை செய்ய முயன்ற தாய் ஜூனிபெர் ப்ரைசன் (21) போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
Also Read : ட்ரம்ப் வெற்றி – இந்திய பங்குச்சந்தையில் அதிரடி ஏற்றம்..!!
முதலில் தத்தெடுத்துக் கொள்ளுமாறு ஃபேஸ்புக்கில் பதிவிட்ட ப்ரைசன், தத்தெடுக்க வருவோரிடம் $200 டாலர் பணம் கேட்டதுடன் “குழந்தைக்கு இவ்வளவு கூட மதிப்பில்லையா?” என வாக்குவாதம் செய்துள்ளார். இதனை அறிந்த அண்டைவீட்டு பெண், குழந்தைகள் பாதுகாப்பு துறையிடம் புகாரளித்துள்ளார்.
புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் ஜூனிபெர் ப்ரைசன் வீட்டிற்கு வந்து அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர் விசாரணையில் ப்ரைசன் பச்சிளம் குழந்தையை ஆன்லைனில் விற்பனை செய்ய முயன்றது உறுதியானதை அடுத்து அவரை போலீசார் சிறையில் அடைத்துள்ளனர்.