Site icon ITamilTv

மாமியார் கொடுமையால் மருமகள் தற்கொலை – கைதுக்கு பயந்து விஷமருந்திய மாமியாரும் உயிரிழப்பு..!!

Mother-in-law

Mother-in-law

Spread the love

கன்னியாகுமரி அருகே திருமணமான ஆறு மாதங்களிலேயே இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்த நிலையில் போலீசாரின் நடவடிக்கைக்கு பயந்து விஷமருந்திய மாமியாரும் உயிரிழந்துள்ளார்.

கோவை மாவட்டம் கோயில்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாபு (56).இவருக்கு சுருதிபாபு (24) என்ற மகளும் விஷால் என்ற மகனும் உள்ளனர் . இந்நிலையில் மகள் சுருதிபாபுவை குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே நாகராஜன் – செண்பகவல்லி தம்பதியரின் மகன் கார்த்திக் என்பவருக்கு கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்துள்ளார்கள்.

திருமணம் முடிந்து பல கனவுகளுடன் தனது கணவர் வீட்டில் வாழ வந்த சுருதிபாபுவை அவரது மாமியார் மனரீதியாக மிகவும் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

Also Read : ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான செலவை நான் பார்த்து கொள்கிறேன் – வியாசர்பாடி நாகேந்திரன் பரபரப்பு வாக்குமூலம்

மாமியாரின் இந்த கொடூர நடவடிக்கைகளால் மனஉளைச்சல் அடைந்த சுருதிபாபு, இது குறித்து தனது தாயாருக்கு வாட்ஸ்ஆப் கால் மூலமாக தெரிவித்து தற்கொலை செய்துகொண்டுள்ளார் .

மகளின் இறப்பு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை தனது மகளின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகவும் மாமியார் கொடுமைபடுத்தியுள்ளதாகவும் கூறி சுசீந்திரம் காவல் நிலையத்தில் சுருதிபாபுவின் தந்தை புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து புகாரை ஏற்றுக்கொண்ட போலீசார் சுருதிபாபுவின் இறப்பு குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு மாமியாரை கைது செய்ய முயன்றபோது கைது பயந்த அவரது மாமியார் விஷமருந்தியுள்ளார்.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சுருதிபாபுவின் மாமியார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Spread the love
Exit mobile version