Site icon ITamilTv

நள்ளிரவில் கேட்ட பெண்ணின் அலறல் சத்தம்… மாமியாரின் கொடூர செயல்..?

Spread the love

மத்திய பிரதேசத்தில், மருமகளின் அந்தரங்க உறுப்பில் மாமியார் (mother in law) காய்ச்சிய இரும்பு கம்பியால் சூடு வைத்து தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மத்தியப் பிரதேசத்தில், உள்ள விதிஷா என்ற பகுதியில் வசித்து வந்த பெண் ஒருவருக்கு, சுகி செவானியா கிராமத்தில் வசிக்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இளைஞர் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்த நிலையில், இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது.

இந்நிலையில், திருமணமான சில மாதங்களிலேயே அந்த நபர் வரதட்சணை கேட்டு பெண்ணை சித்ரவதை செய்து வந்துள்ளார். இதனால், இருவருக்கும் இடையே தினமும் வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில், ஒருகட்டத்தில் பொறுமையை இழந்த அந்த பெண் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கணவர் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அதையடுத்து, தனது மனைவியை காணவில்லை என கணவர் உலர் செவானியா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், அவரது மனைவி அவருடைய தாய் வீட்டிற்கு சென்று இருப்பதை அறிந்த மாமியாரும் (mother in law), மைத்துனரும் அந்தப் பெண்ணிடம் சென்று சமாதானம் பேசியுள்ளனர்.

மேலும், அந்த பெண்ணிடம் இனி சண்டை சச்சரவு ஏதும் ஏற்படாமல் இருக்கும் வகையில் தாங்கள் நடந்து கொள்வதாக கூறிய நிலையில், அதனை நம்பிய அந்தப் பெண்ணும் மாமியார் மற்றும் மைத்துனருடன் கணவன் வீட்டிற்கு சென்றுள்ளார்.

வீட்டிற்கு வந்தவுடன் அந்தப் பெண்ணை ஒரு நாள் முழுவதும் தனி அறை ஒன்றில் அடைத்து வைத்து சித்திரவதை செய்துள்ளனர். அப்போது, மாமியார் அந்தப் பெண்ணை நிர்வாணப்படுத்தி சூடான இரும்பு கம்பியால் பெண்ணின் உடல் மற்றும் அந்தரங்க உறுப்பில் சூடு வைத்துள்ளார்.

அப்போது, வலியால் அலறித்துடித்த பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு, அருகிலிருந்த மக்கள் சென்று அந்த அறையைத் திறந்து பார்த்த போது அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர்கள் உடனடியாக பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அனுமதித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து, காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டநிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் கணவர், மாமியார் மற்றும் மைத்துனர் ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர்

மேலும், அந்த பெண் அளித்த புகாரின் பேரில் அவர்கள் மூவர் மீதும் துன்புறுத்தல், வரதட்சணை கொடுமை மற்றும் பிற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


Spread the love
Exit mobile version