மத்தியப் பிரதேசம் (MP) மொரேனா மாவட்டத்தில் 34 வயது கர்ப்பிணிப் பெண்ணை மூன்று ஆண்கள் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, அந்தப் பெண்ணின் உடலில் தீ வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதில் கர்பிணிப்பெண் 80 சதவீத தீக்காயங்களுடன் குவாலியரில் உள்ள மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கண்டு வருகின்றனர்.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் குறைந்தபாடில்லை. இதற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் (MP) நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம், மொரேனா மாவட்டத்தில் வசித்து வருபவர் 34 வயது கர்ப்பிணி பெண்.
இந்தப் கர்ப்பிணி பெண்ணின் கணவர், சந்த்கா புரா கிராமத்தில் வசித்து வரும் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டுக்காக சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.
தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த கர்ப்பிணி பெண், தனது கணவர் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்த பெண்ணின் வீட்டுக்கு சமரசம் பேசுவதற்காக நேற்று சென்றிருக்கிறார்.
மொரேனா மாவட்டத்தில் உள்ள அம்பா நகரத்திலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள சந்த்கா புரா கிராமத்தில் அந்த பெண்ணின் வீடு அமைந்துள்ளது.
https://x.com/ITamilTVNews/status/1758819921524629783?s=20
அப்போது அந்தப் பெண்ணின் வீட்டில் இருந்த மூன்று ஆண்கள், சமரசம் பேசச் சென்ற கர்ப்பிணி பெண்ணை, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்திருக்கின்றனர்.
அதன் பிறகு, குற்றம்சாட்டப்பட்ட மூன்று ஆண்களும், வீட்டில் இருந்த பாதிக்கப்பட்ட பெண்ணும் சேர்ந்து அந்த கர்ப்பிணிப் பெண் மீது எரிபொருளை ஊற்றி எரித்துள்ளனர்.
இதில் கர்பிணிப்பெண் 80 சதவீத தீக்காயங்களுடன் குவாலியரில் உள்ள மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகிறார். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க : England-க்கு எதிரான 3வது டெஸ்ட்-ஜெய்ஸ்வால் அதிரடி சதம்!
மேலும் இது தொடர்பான வீடியோ ஒன்றை கர்ப்பிணிப் பெண்ணின் கணவர் காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.