Site icon ITamilTv

james vasanthan : கட்சி பெயரை மாத்துங்க! – விஜய்க்கு ஜேம்ஸ் வசந்தன் கோரிக்கை

james vasanthan

james vasanthan : கட்சி பெயரை மாத்துங்க! - விஜய்க்கு ஜேம்ஸ் வசந்தன் கோரிக்கை

Spread the love

தமிழக வெற்றி கழகம் என்பதற்கு பதிலாக தமிழக வெற்றிக் கழகம் என விஜய் கண்டிப்பாக மாற்ற வேண்டும் என இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் (james vasanthan) கோரிக்கை வைத்துள்ளார்

நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற தகவல் கடந்த பல மாதங்களாகவே பேசப்பட்டு வந்த நிலையில், “தமிழக வெற்றி கழகம்” என்ற புதிய கட்சியை நடிகர் விஜய் தொடங்கி உள்ளார்.

இது குறித்த அதிகார பூர்வ அறிவிப்பை அறிக்கையாக வெளியிட்ட நடிகர் விஜய் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும், எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் விஜய் தெரிவித்துள்ளார்.

மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவது தான் இலக்கு என்றும் அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் புதிய கட்சி தொடங்கியது குறித்து பல்வேறு தரப்பினரும் வாழ்த்துக்களையும், கருத்துக்களையும் தெரிவித்து வருகிறனர்.

இந்த நிலையில் அவரது அரசியல் வருகை தொடர்பாக இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் (james vasanthan) தனது கருத்துகளை பேசியுள்ளார்.

அதில், “விஜய் நல்ல சம்பாதிப்பவர். அவர் மக்கள் இயக்கம் மூலமாக செய்த உதவிகளை நான் தவறாக பார்க்கவில்லை.

மதத்தையும், ஜாதியையும் வச்சு மக்களை மயக்குவதற்கு பதில் நேர்மையான விஷயங்களை இளைஞர்களை உற்சாகப்படுத்துவது வசீகரிப்பது தவறில்லை.
அவரை நடிகராக நமக்கு தெரியும்.

அரசியல்வாதியா என்ன பண்ணப் போறாருன்னு எல்லோருடைய எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
விஜய் சினிமாவில் இருந்து விலகுவது வருத்தமாக உள்ளது. அவரை நம்பி இருந்த தயாரிப்பாளர் தொடங்கி கடைநிலை ஊழியர் வரை அனைவருக்கும் வர்த்தக ரீதியாக இழப்பு தான்.

ஆனால் ரொம்ப வயதாகி வாய்ப்புகள் குறைந்து ஒருவர் இன்னொரு துறைக்குள் போகாமல் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போது எல்லாத்தையும் விட்டுட்டு போறாருன்னு சொல்றப்ப வியப்பாகவே உள்ளது.

அரசியலில் ஏராளமான பிரச்சினைகளை எதிர்கொள்ளப் போவதை நான் தியாகமாகவே பார்க்கிறேன். ஏதோ ஒரு உந்துதல் விஜய்க்குள் உள்ளது.

நடிகர்களுக்கு எதற்கு இந்த அரசியல் என்ற கேள்வி பலருக்கு எழலாம். யார் வேண்டுமானாலும் பதவிக்கு வர ஆசைப்படலாம். அதை குறை சொல்ல முடியாது.

இதையும் படிங்க : Government bus ஓட்டை வழியே கீழே விழுந்த பெண் பயணி-அமைச்சர் சிவசங்கர் அதிரடி

தமிழக வெற்றி கழகத்தின் அறிக்கையில் நிறைய பிழைகள் இருந்ததாக சுட்டிக்காட்டப்பட்ட நிலையில் பதிலுக்கு திமுகவின் அறிக்கையிலும் பிழைகள் சுட்டிக்காட்டப்பட்டு வருகிறது.

இந்த பிரச்சினையில் விஜய் கண்டிப்பாக தமிழக வெற்றி கழகம் என்பதற்கு பதிலாக தமிழக வெற்றிக் கழகம் என மாற்ற வேண்டும்.

மொழியில் பிழை என தெரியும் போது அதை சரிசெய்யாமல் மொழியை காக்க திராணி இல்லாதவர் எப்படி மொழியை பேசும் மக்களை காப்பார் என்பதற்கு அவரிடம் விடையே இல்லை.

இதனை அவர் மாற்றி தான் ஆக வேண்டும். மாற்றவில்லை என்றால் அது மிகப்பெரிய தவறாக மாறும் என தெரிவித்துள்ளளார்


Spread the love
Exit mobile version