ITamilTv

தேனியில் மாணவர் மர்ம மரணம்.. தனியார் கல்லூரி விடுதியில் நேர்ந்த விபரீதம்!

Spread the love

தேனி மாவட்டத்தில் உள்ள குள்ளபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் சி.ஏ.டி கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்த மாணவர் ஒருவர் தண்ணீர் தொட்டியில் மர்மான முறையில் சடலமாக மிதந்த சம்பவம் (Mysterious death) அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், உயிரிழந்த மாணவர் 60 அடி ஆழ கிணற்றில் குதித்து நீச்சல் அடிக்கும் திறன் கொண்டவர் என்றும், எப்படி 10 அடி ஆழமுள்ள தண்ணீரில் தொட்டியில் மூழ்கி உயிரிந்திருப்பபார் என்று உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

பெரம்பலூர் மாவட்டதில் உள்ள சின்னமுட்டி கிராமத்தை சேர்ந்த சந்திரசேகர் என்பவரது மகன் அருண்பல்லவ் சி.ஏ.டி கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் மாணவர் அருண் பல்லவ் விடுதி அருகே உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கி உயிரிழந்துவிட்டதாக கூறி உடன் பயிலும் மாணவர்கள், சந்திரசேகருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இதுகுறித்து கல்லூரி நிர்வாகம் எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை என்றும், கல்லூரிக்கு சென்று பார்த்த போது மாணவர் உயிரிழந்ததாக கூறப்பட்ட தண்ணீர் தொட்டியில் 10 அடிக்கு மட்டுமே தண்ணீர் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், சந்தேகத்தின் பேரில் கல்லூரி தரப்பிடம் விசாரித்த போது சம்பவத்தன்று மாணவர் அருண் பல்லவ், சக மாணவர்களுடன் தண்ணீர் தொட்டியில் இறங்கி குளித்ததாகவும், அப்போது தொட்டியில் 15 அடி ஆழத்திற்கு தண்ணீர் இருந்த நிலையில், மாணவர்கள் ஒருவர் மீது ஒருவர் ஏறிகுதித்து விளையாடியதால் அருண்பல்லவ் நீரில் மூழ்கியதாகவும், இந்நிலையில் அவருடன் குளித்த மாணவர்களால் அவரை காப்பாற்ற முடியாததால், நன்கு நீச்சல் தெரிந்த சீனியர் மாணவர்களை அழைத்து வந்து அருண்பல்லவை போராடி மீட்டதாகவும் அதற்குள்ளாக அவர் உயிரிழந்து விட்டதாகவும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

60 அடி ஆழ கிணற்றில் கூட குதித்து நீச்சல் அடிக்கும் திறன் கொண்ட மாணவர் அருண் பல்லவ் 10 அடி தொட்டித் தண்ணீரில் மூழ்கி உயிரிழக்க வாய்ப்பில்லை என்று கூறிய மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தங்கள் பிள்ளையின் மர்ம மரணத்துக்கு (Mysterious death) நீதி கிடைக்கும் வரை அவரது சடலத்தை வாங்க போவதில்லை என்று கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதையடுத்து, அங்கு வந்த காவல் துறையினர் சம்மந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று உறுதி அளித்த நிலையில், பெற்றோர், உறவினர்கள், போராட்டத்தை விலக்கிக் கொண்டனர்.


Spread the love
Exit mobile version