நாஞ்சில் சம்பத் (Nanji Sampath) உடல் நலக்குறைவு காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறு வயதிலேயே பேச்சில் சிறந்த விளங்கிய இவர் திமுகவில் தலைமைக் கழகப் பேச்சாளராக இருந்தார். பின்னர், வைகோ திமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட போது இவரும் வெளியேறினார்.
மதிமுகவின் கொள்கை பரப்புச் செயலாளராக இருந்த நாஞ்சில் சம்பத் (Nanji Sampath), வைகோவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியில் இருந்து விலகி 2012ஆம் ஆண்டு ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
தமிழ்நாட்டின் சிறந்த பேச்சாளர்களில் ஒருவரான அவருக்கு அங்கு கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. பின்னர், 2016 ஜனவரி 2ம் தேதி அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு சசிகலா ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தார். இதனையடுத்து, டிடிவி.தினகரன் கட்சியில் இணைந்து பின்னர் அதிருப்தியின் காரணமாக வெளியேறினார்.
பின்னர், அரசியலில் இருந்தே விலகுவதாக அறிவித்து நாஞ்சில் சம்பத், சமீப காலமாக திமுக நடத்தும் கூட்டங்களில் கலந்துகொண்டு திராவிட இயக்கம் சார்ந்து பேசி வருகிறார்.
இந்த நிலையில், நாஞ்சில் சம்பத் உடல் நலக்குறைவு காரணமாக கன்னியாகுமரி மாவட்டம் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். தற்போது நாஞ்சில் சம்பத் நலமாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.