Site icon ITamilTv

சென்னையில் போலீசாரை ஆபாசமாக பேசிய போதை ஜோடி ஜாமின் கோரி நீதிமன்றத்தில் மனு..!!

petition

petition

Spread the love

சென்னையில் போலீசாரை ஆபாசமாக பேசிய போதை ஜோடி போலீசாரால் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

சென்னை பட்டினப்பாக்கத்தில், தலைக்கேறிய மதுபோதையில் போலீசாரை ஆபாசமாக பேசிய ஜோடி மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

போலீசாரிடம் அத்துமீறிய ஜோடி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்த நிலையில், மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

பேசுவதை எல்லாம் பேசிவிட்டு கமுக்கமாக பதுங்கி இருந்த ஜோடியை ஒரு லாட்ஜில் வைத்து கைது செய்த போலீசார் அவர்களுக்கு தக்க பாடத்தை புகட்டினர்.

Also Read : கர்நாடகாவில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் : 98 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு..!!

இந்நிலையில் சென்னை மெரினா லூப் சாலையில் காவலர்களை மிரட்டிய வழக்கில் கைதான சந்திரமோகன் ஜாமின் கோரி முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.

“போலீசார் தன்னையும் தனது மனைவியையும் தகாத வார்த்தைகளால் பேசியதுடன், தனது தோழியிடம் தவறாக நடந்து கொண்டதால் வாக்குவாதம் ஏற்பட்டது” என மனுவில் சந்திரமோகன் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சந்திரமோகனின் ஜாமின் மனு மீது காவல்துறை தரப்பில் பதிலளிக்க நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்துள்ளார்.


Spread the love
Exit mobile version