Site icon ITamilTv

மதுரையில் இன்று முதல் 4 நாட்கள் நடைபெற உள்ள தேசிய நரம்பியல் மாநாடு!!

Spread the love

மதுரை நரம்பியல் கழகத்தின் ஆதரவுடன் இந்திய நரம்பியல் கழகம் இந்த ஆண்டின் 2023 தேசிய நரம்பியல் மாநாட்டினை மதுரையில் 14ம் தேதி முதல் 17ம் தேதி வரை மதுரையில் தனியார் ஹோட்டலில் நடைபெறும் இந்த மாநாட்டுக்காக இந்தியா மட்டுமின்றி உலகில் பல்வேறு பகுதிகளில் இருந்து தோராயமாக 1100 நரம்பியல் மருத்துவர்கள் பங்கேற்க உள்ளனர்.

40 உள்நாட்டு பேச்சாளர்களும் 13 அயல் நாட்டு பேச்சாளர்களும் நரம்பியல் தலைப்பில் உரையாற்ற உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் நரம்பியல் துறையில் வலிப்பு, வாதம், தலைவலி, நரம்பு நோய், மறதி நோய் மற்றும் தசை சிதைவு நோய் பல்வேறு உட்பிரிவுகளையும் நரம்பியல் மருத்துவத்தின் அடிப்படைகளையும் விரிவாக விவாதித்து நம் நாட்டு தரவுகளின் புள்ளி விவரங்களின் அடிப்படையில் பல வாதங்கள் அரங்கத்தினர்களின் பங்கேற்புடன் நடைபெற உள்ளது.

இன்று (14.09.23) முதல் நடைபெறவுள்ள இந்த துவக்க விழாவில் தமிழ்நாடு டாக்டர் எம் ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் கே நாராயணசாமி அவர்கள் தலைமையில் விருந்தினராக பங்கேற்க உள்ளார். மேலும், தேசிய மருத்துவ ஆணையத்தின் உறுப்பினர் பேராசிரியர் டாக்டர் கே செந்தில் அவர் சிறப்புரை ஆற்ற உள்ளார்.

உலக நரம்பியல் கூட்டமைப்பு தலைவர் பேராசிரியர் டாக்டர் உலகேல் கிரிஸோல்டு அவர்கள் மற்றும் மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் பேராசிரியர் டாக்டர் ரத்தினவேல் அவர்களும் கெளரவிக்கப்பட உள்ளனர். துவக்க விழா நிகழ்வில் இந்திய நரம்பியல் கழகத்தின் தலைவருமான பேராசிரியர் டாக்டர் சுகன்தீப் சிங் மற்றும் இந்திய நரம்பியல் கழகத்தின் செயலாளரான டாக்டர் மீனாட்சி சுந்தரம் அவர்கள் வழிநடத்தி தர உள்ளனர்.

இந்த மாநாட்டுக்கு முதல் நாள் அன்று விவாதங்கள் படுக்கை தீவிரத்தை வார்டுகளில் கண்டறிய உதவும் கபால ஊடுகதிர் கருவி குறித்த பயிலரங்கம் நடைபெற உள்ளது. இதற்கு மூத்த நரம்பியல் பேராசிரியர் கே சீனிவாசன் அவர் தலைமை தாங்குகிறார்.

மாநாட்டுக்கு வருகை தரவுள்ள பேச்சாளர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் மதுரையின் மூத்த நரம்பியல் பேராசிரியர் மருத்துவர் கே சீனிவாசன் மற்றும் மதுரை மருத்துவக் கழகத்தின் தலைவர் மரு மெய்கண்டன் செயலாளர் மணிவண்ணன் மற்றும் மதுரை மருத்துவக் கழகத்தில் உறுப்பினர்கள் சார்பில் இந்த மாநாட்டுக்கு வரவேற்கப்படுகிறது.


Spread the love
Exit mobile version