ITamilTv

நேபாள நிலநடுக்கம் – இந்தியா அனைத்து உதவிகளையும் செய்யும் இந்திய பிரதமர்!

Spread the love

நேபாளத்தின் மேற்குப் பகுதியில் நேற்று நள்ளிரவு ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி 132 பேர் உயிரிழந்துள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் அடுத்தடுத்து ஏற்படும் நிலநடுக்கங்கள் அங்குள்ள மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில்,நேற்று இரவு 11.30 மணியளவில் நேபாளத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.4 ஆக இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் பீதி அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதியில் தஞ்சம் அடைந்தனர்.
சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 128ஆக உயர்ந்தது. 140 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இந்த நிலநடுக்கத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபடுவதற்காக நேபாள ராணுவம் மற்றும் நேபாள காவல்துறை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் நேபாள நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைந்து வரவேண்டும் என பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்து உள்ளார். மேலும் நேபாள மக்களுக்கு இந்தியா அனைத்து உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


Spread the love
Exit mobile version