ITamilTv

பக்தர்களை பதம் பார்த்த தேனீக்கள்; அலறியடித்து ஓடிய 50க்கும் மேற்பட்டோர்!

honey

Spread the love

திருச்சி அருகே, கல்லறை தோட்டத்தில் வணக்க வழிபாட்டுக்காக சென்ற 50க்கும் மேற்பட்டோரை அங்கிருந்த தேனிக்கள் பதம்பார்த்துள்ளன.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள சிறுமயங்குடி ஊராட்சியில் காட்டு சவேரியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் தற்போது திருவிழா நடைபெறுவதை முன்னிட்டு, புதன்கிழமை தேர்பவனி நடந்தது.
இந்நிகழ்வில் பக்தர்கள் பலரும் பங்கேற்று சவேரியார் தரிசனம் பெற்றனர்.
முன்னதாக இங்குள்ள வனத்து சின்னப்பர் கல்லறைத் தோட்டத்திற்கு பெண்கள், பெரியவர்கள் என 100க்கும் மேற்பட்டோர் சென்றுள்ளனர். அங்கு அடக்கம் செய்யப்பட்டிருக்கும் தமது உறவுகளுக்காகவும், மூதாதையர்களுக்காகவும் அவர்கள் அங்கு பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்காக சாம்பிராணி புகை போட்டுள்ளனர். இந்த புகை அதிகமாக கிளம்பிய அங்கிருந்த ஆலமரத்தில் கூடு கட்டியிருந்த தேனிக்களை பாதித்துள்ளது. இதனால் கூட்டில் இருந்து கலைந்த தேனிக்கள், அங்கு வணக்க வழிபாட்டில் ஈடுபட்டிருந்த 50க்கும் மேற்பட்டோரை தலை, கை, கால், முகம் என உடலெங்கும் கொட்டின.

இதனால் பலரும் அங்கிருந்து அலறியடித்தபடி ஓடினர்.

இந்த நிலையில் தேனி கொட்டி காயம் அடைந்த அனைவரும் 108 ஆம்புலன்ஸ் மூலம் லால்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிகிச்சைக்கு வழங்கப்பட்டது.
இதில் தேனீக்கள் கொட்டியதில் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஒருவர் மட்டும் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
பக்தர்களை தேனீக்கள் விரட்டி விரட்டி கொட்டியதில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு வந்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: மதுராந்தகம் சாலை விபத்தில் 4 பேர் உயிரிழப்பு – முதல்வர் ஸ்டாலின் இரங்கல்..!!


Spread the love
Exit mobile version