ITamilTv

புகைச்சலை கிளப்பும் ஆருத்ரா விவகாரம் : ஆர்.கே.சுரேஷ்யின் பரபரப்பு வாக்குமூலம்!

Spread the love

ஆருத்ரா நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பான நடிகர் ஆர்.கே.சுரேஷ் போலீஸ் விசாரணைக்கு நேற்று நேரில் ஆஜரானார்.

காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவண்ணாமலை சென்னை வேலூர் ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் ஆருத்ரா கோல்டு டிரேடிங் பிரைவேட் லிமிடெட் என்ற நிதி நிறுவனத்தில் ஒரு லட்சம் ரூபாய் பணம் போட்டால் மாதம் 25 ஆயிரம் ரூபாய் வரும் எனக் கூறி கவர்ச்சிகரமான விளம்பரத்தைக் நம்பி 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ரூ.2,438 கோடி வரை முதலீடு செய்தனர்.

ஆனால், வாக்குறுதி அளித்தபடி அந்த நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு வட்டிப் பணத்தை கொடுக்காமல் மோசடியில் ஈடுபட்டதாக, தமிழக காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது.

புகாரின் அடிப்படையில், இந்த மோசடி தொடர்பாக, பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ₹2438 கோடி தொடர்புடைய ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன வழக்கில், 3000 பக்க குற்றப்பத்திரிகையை, சிறப்பு நீதிமன்றத்தில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தாக்கல் செய்தனர்.

இதனை தொடர்ந்து ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி தொடர்பாக, அந்த நிறுவனத்தில் இயக்குநர்களில் ஒருவரான பாஜக நிர்வாகி ஹரீஷ், இயக்குநர்கள் பாஸ்கர், மோகன்பாபு, செந்தில் குமார், நாகராஜ், அய்யப்பன், ரூசோ உள்பட பலர் 21 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் கைதான ரூசோ என்பவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நடிகரும், பாஜக ஓபிசி பிரிவு துணை தலைவராக உள்ள ஆர்.கே.சுரேஷிற்கு ஆருத்ரா மோசடியில் தொடர்பு உள்ளது தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து விசாரணையை தீவிரப்படுத்தி உரிய ஆவணங்களுடன் நேரில் ஆஜராக ஆர்.கே.சுரேசுக்கு பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு சம்மன் பலமுறை அனுப்பியது. ஆனால் இதற்கு எதிராக ஆர்.கே.சுரேஷ் தாக்கல் செய்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் ஆர்.கே.சுரேஷி துபாய் சென்று தலைமறைவாகி விட்டார்.

இதையடுத்து, ஆர்.கே.சுரேஷிற்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. மேலும், அவரது வங்கிக் கணக்குகளை பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு போலீசார் முடக்கி நடவடிக்கை எடுத்தனர்.

இந்த நிலையில், தலைமறைவாக இருந்த நடிகர் ஆர்.கே.சுரேஷ் சென்னை திரும்பினார். முன்னதாக, அவர் மீது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், சென்னை விமான நிலையத்தில் குடியுரிமைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

நீதிமன்ற உத்தரவுப்படி போலீஸ் விசாரணைக்கு ஆஜராக வந்ததாக தெரிவித்ததால் ஆர்.கே.சுரேஷ் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், உறுதி அளித்தபடி நடிகர் ஆர்.கே.சுரேஷ் நேற்று காலை 10.45 மணியளவில் சென்னை அசோக்நகரில் உள்ள பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸ் அலுவலகத்துக்கு

வந்து அப்பிரிவு கூடுதல் எஸ்.பி வேல்முருகன் முன்னிலையில் ஆஜரானார். அவரிடம் நேற்று மாலை வரைசுமார் 7 மணி நேரம் போலீஸார் விசாரணை நடத்தினர். நாளையும் விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில் விசாரணைக்கு பின்னர் வெளியே வந்த ஆர்.கே.சுரேஷ், ஆருத்ரா மோசடி வழக்குக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


Spread the love
Exit mobile version