Site icon ITamilTv

மக்களின் வரி பணத்தில்…பிரதமர் மோடியின் மருத்துவச் செலவு..!!-ஆர்டிஐ வெளியிட்டமுக்கிய தகவல்…!

Spread the love

நரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்றது முதல் தனக்கான மருத்துவ செலவுகளை தானே ஏற்றுக் கொண்டு வருவது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவின் பிரதமாக கடந்த 2014ம் ஆண்டு மே 26ம் தேதி நரேந்திர மோடி பதவி ஏற்றார்.இந்த நிலையில் 8 ஆண்டுகளாக பதவியில் நீடித்து ஆட்சி செய்து வருகிறார். இந்த நிலையில் பிரதமர் மோடி அணியும் உடை மற்றும் வெளிநாட்டு பயங்கள் குறித்து அவ்வபோது சர்ச்சை எழுந்து வருகிறது.  மேலும் பிரதமர் மோடி மக்களின் வரி பணத்தில் செலவு செய்வதாக எதிர் கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டி வந்த நிலையில்,

பிரதமராக பதவி ஏற்றது முதல் தனக்கான மருத்துவ செலவுகளை நரேந்திர மோடி தானே ஏற்றுக் கொண்டு வருவது தகவல் அறியும் உரிமை சட்டத்தின்மூலம் தெரியவந்துள்ளது.

அதில் புனேவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பிரஃபுல் சர்தா கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்துள்ள பிரதமர் அலுவலகம், மருத்துவச் செலவு முழுவதையும் பிரதமரே ஏற்றுக் கொண்டிருப்பதாகவும், இதற்காக, ஒரு ரூபாய்கூட அரசு செலவு செய்யவில்லை என்றும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சமூக ஆர்வலர் பிரஃபுல் சர்தா, ஆரோக்கியமான இந்தியா இயக்கம் மூலம் மக்களுக்கு செய்தியை அளிப்பதோடு மட்டுமன்றி, தானே உதாரணமாக இருந்து ஆரோக்கியமாக இருப்பது குறித்து 135 கோடி இந்தியர்களையும் மோடி ஊக்குவித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

பிரதமர் அலுவலகத்தின் தனிப்பட்ட பணிகளுக்கு வரிசெலுத்துவோரின் பணம் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்றும், இது ஆளுமை மீதான நமது நம்பிக்கையை அதிகரித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து 8 ஆண்டுகளாக பதவியில் நீடித்து பிரதமர் மோடி செயல் அனைவரது பாராட்டுகளை பெற்று வருகிறது.


Spread the love
Exit mobile version