Site icon ITamilTv

கள்ளசாராய விவகாரம் : முதல்வர் பேசிய விடியோ..புகைச்சலை கிளப்பிய அண்ணாமலை!

Annamalai

Annamalai

Spread the love

கள்ள சாராயம் குறித்து கடந்த ஆண்டு ஜூலை மாதம், தமிழக முதலமைச்சர் பேசிய காணொளியை தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.

திமுக அரசின் நடவடிக்கையால் கள்ளச்சாராயம் காய்ச்சுவதும் விற்பதும் வெகுவாக குறைந்து விட்டதாக, தனக்குத் தானே பாராட்டு பத்திரத்தை வாசித்துக் கொண்டிருந்ததோடு மட்டுமல்லாமல், வாரம் தோறும் ஆய்வுகள் நடத்தப்படும் என்று வீண் விளம்பரமும் செய்திருந்தார்.

இதையும் படிங்க: 4 விசிக MLA என்ன பண்றாங்க..” – திருமாவிடம் கேள்வி கேட்ட நாச்சியாள் சுகந்தி.. சூழ்ந்த விசிகவினர்.. பெரும் பரபரப்பு!

இவர்கள் நடத்திய ஆய்வின் லட்சணம்தான், கள்ளச்சாராயத்தால் இன்று 55 உயிர்களைப் பறிகொடுத்துள்ளோம். இத்தனை நடந்த பின்னரும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கள்ள மௌனம் காத்து வருகிறார் முதல்வர்.

திமுகவின் நிர்வாகத் திறமையின்மையை எதிர்த்துப் போராட்டம் நடத்தி வரும் எங்கள் பாஜக சகோதர சகோதரிகளைக் கைது செய்து முடக்குவதில் காட்டும் அக்கறையைச் சிறிதேனும், கள்ளச்சாராய ஒழிப்பில் காட்டியிருந்தால், பல குடும்பங்கள் இன்று ஒரே நாளில் நடுத்தெருவுக்கு வந்திருக்காது.

இனியும் தாமதிக்காமல், மது ஒழிப்பு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சரைப் பதவி நீக்கம் செய்வதுதான், முதலமைச்சரின் ஒரே தார்மீகக் கடமையாக இருக்கும். செய்வாரா ஸ்டாலின் என்று கேள்விஎழுப்பியுள்ளார்.


Spread the love
Exit mobile version