Site icon ITamilTv

சீன விசா முறைகேடு வழக்கு : கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமின்- நீதிமன்றம் அதிரடி!

KarthiChidambaram bail

KarthiChidambaram bail

Spread the love

சீன விசா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்கி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவரான ப.சிதம்பரம், 2011-ல் மத்திய உள்துறை அமைச்சராகப் பதவி வகித்த போது பஞ்சாப் மாநிலத்தில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிய 263 சீன நாட்டவருக்கு சட்டவிரோதமாக விசா கொடுக்கப்பட்டது.

தந்தையின் செல்வாக்கைப் பயன்படுத்தி கார்த்தி சிதம்பரம் அந்த விசாக்களைப் பெற்றுக் கொடுத்ததாக கூறப்படிக்கிறது.அதற்காக 50 லட்சம் ரூபாயை லஞ்சமாகப் பெற்றார் என சி.பி.ஐ வழக்கு பதிவுசெய்தது.

இதேபோல் அமலாக்கப் பிரிவும் கார்த்தி சிதம்பரம் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை தொடர்பாக வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கு தொடர்பாக ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் சி.பி.ஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.

இதையும் படிங்க: ”இந்த நொடி நேரம் என் உயிரில் ஈரம்❣️” வெற்றி சான்றிதழை அம்மாவிடம் காண்பித்து மகிழ்ந்த கனிமொழி!

இந்தச் சோதனைகளின் முடிவில் கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கர் ராமன் கைதுசெய்யப்பட்டார். அவரிடம் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.இந்த நிலையில், தம் மீதான குற்றச்சாட்டுகளை கார்த்தி சிதம்பரம் திட்டவட்டமாக மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

மேலும் வழக்கு மீதான விசாரணை இன்று டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.அப்போது கார்த்தி சிதம்பரம் நேரில் ஆஜரானர். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி சீன விசா முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை வழக்கில் கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமின் வழங்கி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


Spread the love
Exit mobile version