Site icon ITamilTv

என்னடா இது மாம்பழத்திற்கு வந்த சோதனை..உஷார் மக்களே உஷார்….

மாம்பழம்

மாம்பழம்

Spread the love

மாம்பழம்: மாம்பழ சீசன் தொடங்கியுள்ள இந்த சமயத்தில் விற்பனையை அதிகரிக்கப் பழ சந்தைகளில் செயற்கை பழுக்க வைக்கும் ஸ்ப்ரேக்களை பயன்படுத்துவது பொதுவானதாகிவிட்டது.இதனை ஏற்படும் உடல்நலக் குறைபாடுகளிலிருந்து மக்களைக் காக்க உணவு பாதுகாப்புத் துறையினர் பல இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணியிலிருந்து கோயம்பேடு சந்தையில் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
உணவு பாதுகாப்புத் துறை நடத்திய சோதனையில் இதுவரை கோயம்பேடு சந்தையில் மொத்தம் நான்கு டன் செயற்கை முறையில் பழுத்த மாம்பழங்கள் மற்றும் வாழைப்பழங்ககள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

பழங்களை வேகமாகப் பழுக்க வைக்கப் பயன்படுத்தப்படும் ஸ்ப்ரேக்களில் கால்சியம் கார்பைடு, ஆர்சனிக் மற்றும் பாஸ்பரஸ் போன்ற இரசாயனங்கள் உள்ளன.இவற்றைப் பயன்படுத்திப் பழுக்கவைத்த பழங்களைச் சாப்பிடுவதால் தோல் பிரச்சினைகள், சுவாச நோய்கள் போன்ற பல பிரச்சினைகள் ஏற்படும்.

இதையும் படிங்க: செப்டம்பரில் சவுக்கு அமைப்பு தொடங்க இருப்பதாக புதிய அறிவிப்பு

மேலும் இந்த இரசாயனங்களால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாகக் கூறப்படுகிறது.சோதனை தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் பி. சதீஷ் குமார், செயற்கை முறையில் பழுத்த பழங்களை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் மீது துறை நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்தார். சென்னையின் பல இடங்களில் சோதனை தீவிரப்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.

மேலும் பழங்களை வாங்கும் போது பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.உண்மையில் பழுத்த பழங்கள் மற்றும் செயற்கை முறையில் பழுத்த பழங்களை அவற்றின் கலரை வைத்துக் கண்டுபிடிக்கலாம். மாம்பலத்தில் இயற்கை முறையில் பழுத்த பழங்களில் மஞ்சள் நிறத்தின் நிலைத்தன்மை பழம் முழுவதும் சமமாக இருக்கும்.

ஆனால் ரசாயனங்களைப் பயன்படுத்தினால் அது சீரற்றதாக இருக்கும். பழுத்த பழங்களின் இயற்கையான வாசனை செயற்கை முறையில் பழுத்த பழங்களில் இருக்காது.எனவே மக்கள் பழங்களை வாங்கும் போது இதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என்று உணவு பாதுகாப்புத் துறை சார்பில் கூறப்பட்டுள்ளது.


Spread the love
Exit mobile version