ITamilTv

சர்ச்சையை கிளப்பிய முதல்வர் போஸ்டர்.. அண்ணாமலை உதவியாளர் கைது! திமுகவின் அடுத்த அதிரடி..?

Spread the love

கடந்த செம்டம்பர் மாதம் 15 ஆம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் திமுக எம்பியும், திமுக துணைப் பொதுச் செயலாளருமான ஆ.ராசா, இந்து மதத்தை இழிவுபடுத்தும் வகையில் இந்துக்கள் அனைவரும் விபச்சாரிகளின் மகன்கள் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார் .

இந்நிலையில், இந்துக்களை இழிவுபடுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திமுக எம்பி ஆ.ராசாவை கைது செய்யக் கோரி மதுரவாயல் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பாஜகவினர் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.மேலும் இந்து மதம் குறித்த சர்ச்சைக்கு பாஜக கட்சி மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

பாஜக தலைவர் பொன்ராதா கிருஷ்ணன் கண்டனம் :

ஆ ராசா தனது வார்த்தையை திரும்பப் பெற வேண்டும். புத்தகம் படிப்பவர்கள் அனைவருக்கும் தெரியும். ஆட்டை கடித்து மாட்டை கடித்து இறுதியில் அடுத்த மதத்தை இவ்விதம் பேசுவார். இந்துக்கள் சகிப்புத் தன்மை கொண்டவர்கள். நானும் இந்து தான். அனைவருக்கும் குடும்பம் உள்ளது. ராசா இவ்விதம் பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

மேலும் திமுகவில் உள்ள பாசறை கூட்டங்கள் அனைத்தும் உதயநிதி பாசறை கூட்டம் எனவும் அந்த பாசறை கூட்டத்தின் மூலம் 10 அல்ல ஆயிரம் ராசாக்களை அவர்கள் உருவாக்குவார்கள் எனவும் அவர் குற்றம்ச்சாட்டி இருந்தார்.

நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்!' - பா.ஜ.க தோல்விக்கு காரணம் சொல்லும் அர்ஜுன் சம்பத் | Arjun Sampath who says "this is the reason for BJP's defeat"

இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் கண்டனம் :

ஆ ராசாவின் சான்றிதழில் இந்து என்றுதான் உள்ளது ஆனால் இந்துக்களை இழிவாக பேசி வருகிறார் என்று ராசாவை கட்சியில் இருந்து நீக்கி ஸ்டாலின் நடவடிக்கை எடுக்கவேண்டும் அர்ஜுன் சம்பத் கோரிக்கை விடுத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை காளவாசல் பைபாஸ் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் இந்து மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் அர்ஜுன் சம்பத் பிரதமர் மோடியின் எட்டாண்டு சாதனை விளக்க புத்தகத்தை வெளியீட்டார். அப்போது அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது;

மத்திய அரசு தமிழகத்தில் செயல்படுத்திய திட்டங்களை தமிழில் தொகுத்து புத்தகமாக தமிழக மக்கள் அறியும் விதத்தில் வெளியிடப்பட்டுள்ளது.மின்கட்டண உயர்வு மற்றும் மின் இணைப்பு கட்டணம் உயர்வை கண்டித்தும் இந்து மக்கள் கட்சி சார்பில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றோம்.

மாதம் தோறும் மின் கணக்கீடு செய்யப்படும் என்ற தேர்தல் அறிவிப்பு என்ன ஆயிற்று, அறிவிக்கப்படாத மின் வெட்டால் தொழிலாளர்கள், மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.குறிப்பாக இலவச திட்டங்கள் மூலம் பொதுமக்கள் வீடுகளில் உள்ள மிக்சி, கிரைண்டர் உள்ளிட்ட பலவும் பயன்பாடு இல்லாமல் இருந்து வருகிறது. மின் வாரியம் ஊழல் வாரியமாகவும், நிர்வாகம் சீர்கேடுகள் நிறைந்தும் உள்ளது.

ஆவின் பால் பொருள்கள் விலை மற்றும் மக்களுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாமல் ஆ ராசா இந்து மக்களுக்கு எதிராக அவுதூறு பேசவைத்து திசைதிருப்பும் வேலையை திமுக.செய்து வருகிறது.

ஆ ராசாவின் சான்றிதழில் இந்து என்றுதான் உள்ளது, இந்து என்ற பெயரில் அரசின் சலுகைகளை பெற்ற அவர் இந்துக்களை இழிவாக பேசி வருவது கண்டிக்கத்தக்கது அவரை திமுகவில் இருந்து நீக்கி மு க ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் தற்போதைய திமுக ஆட்சி வளர்ச்சி திட்டங்களுக்கு தடையாகவும், பிரிவினை வாதிகளுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வரும் அரசாக உள்ளது. பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடியும் அமித்ஷாவும் வருகிற தேர்தலில் தமிழகத்தில் குறிப்பாக ராமேஸ்வரத்தில் போட்டியிட கோரிக்கை விடுக்கிறேன் என்று தெரிவித்து இருந்தார்.

கோவை மாவட்ட பாஜக தலைவர் உத்தம ராமசாமி கைது :

இந்த நிலையில் திமுக எம்பி ஆ.ராசாவை கண்டித்து இரு தினங்களுக்கு முன் கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் `தைரியம் இருந்தால் கோவையில் கால் வைத்து பார்’ உள்ளிட்ட சில காட்டமான வார்த்தைகளுடன் பாலாஜி உத்தமராமசாமி பேசியிருந்தார்.

இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை தொடர்ந்து த.பெ.தி.க.வினர் அளித்த புகாரின் பேரில் அவர் மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு போலீசார் கைது செய்தனர். பாலாஜி உத்தமராமசாமி கைதை கண்டித்து, பாஜக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தடுப்புகளை அமைத்து காவல்துறையினர் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். இந்த நிலையில் பாலாஜி உத்தமராமசாமிக்கு 15 நாள் நீதிமன்ற காவலில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வானதி சீனிவாசன் கண்டனம் :

பேச்சுரிமை, கருத்து சுதந்திரம் குறித்து பேசும் திமுக, ஆ.ராசா மீது நடவடிக்கை எடுக்காமல், பா.ஜ.க.வினரை மட்டும் கைது செய்வது ஏன்? என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். கோவை மாவட்ட பா.ஜ.க. தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி கைது செய்யப்பட்டது குறித்து வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஆ.ராசாவுக்கு எதிராக பாஜக நடத்தும் போராட்டங்கள் வெற்றி பெற்றதை பொறுத்துக்கொள்ள முடியாமல், தி.மு.க. அரசு கைது நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். திமுகவுக்கு ஜனநாயகத்தின் மீது துளியும் நம்பிக்கை இல்லை என்பது நிரூபிக்கப்பட்டு இருப்பதாகவும் வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் முருகன் கைது :

இந்த நிலையில் வட சென்னை பகுதியில் கடந்த 11 ஆம் தேதி பல்வேறு தெருக்களில் முதல்-அமைச்சரை அவதூறாக சித்தரிக்கும் வகையில் போலி பத்திரிக்கை பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.

இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி மண்டலம் ஐந்தின் உதவி பொறியாளர் ராஜ்குமார் மற்றும் துறைமுகம் திமுக கிழக்குப் பகுதி செயலாளர் ராஜசேகர் ஆகியோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரின் அடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், முதல்-அமைச்சரை அவதூறாக சித்தரித்து சுவரொட்டிகளை ஒட்டுமாறு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் உதவியாளர் கிருஷ்ணகுமார் முருகன் கூறியதும், முதல்-அமைச்சர் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வாசகம் மற்றும் கார்ட்டூன்களை சித்தரித்து சிவகுருநாதனுக்கு அனுப்பியதும் தெரியவந்தது.

இதனையடுத்து, தலைமறைவாக இருந்த கிருஷ்ணகுமார் முருகனை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், இந்த விவகாரத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சிறை நிரப்பும் போராட்டம்:

மனுஸ்மிருதி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் ஆ.ராசாவைக் கேள்வி எழுப்பிய பாரதிய ஜனதா கட்சித் தொண்டர் சமூக அமைதியின்மையை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் மதுரையில் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார்

மேலும், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில், தமிழரின் மாண்பையும் தமிழரின் மரபையும் தமிழரின் தொன்மையையும் இறை நம்பிக்கையையும், இழிவுபடுத்தும் செயல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.தமிழகத் தாய்மார்களை, தமிழினத்தை அவமதிக்கும் கருத்திற்கு, கோவை மாவட்டத்தில், ஜனநாயக ரீதியாக, எதிர்ப்பு தெரிவித்த, பாஜக தொண்டர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதை கண்டித்து வரும் 26ஆம் தேதி, அறவழியில், சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்.


Spread the love
Exit mobile version