தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே, பள்ளிப்பட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில்,வகுப்பறை பீரோவில் உள்ள சத்து மாத்திரைகளை வகுப்பு படிக்கும் 6 மாணவிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பொதுவாக, அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களிடம் ஒரு மாத்திரையை கொடுப்பார்கள். இந்த மாத்திரை வழங்கப்படுவதன் நோக்கம் மாணவர்களுக்கு இரும்பு சத்து உள்ளிட்ட சத்துக்கள் கிடைப்பதற்காக தான் வழங்கப்படும்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் உதகை நகராட்சியில் செயல்பட்டு வரும் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்று வரும் நான்கு மாணவிகள் போட்டி போட்டுக் கொண்டு பத்து மாத்திரை, 20 மாத்திரை, ஒரு சிலர் 30 மாத்திரை என்று அதிகபட்சமாக உயிரிழந்த மாணவி 70 மாத்திரை வரையிலும் சாப்பிட்டு உள்ளனர்.
இதனால் அதிக ஊட்டச்சத்து மாத்திரைகளை (nutritional pills) உட்கொண்டதால் நான்கு பேருக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மாணவிகள் 4 பேரும் உடனடியாக மீட்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒரு மாணவி உயிரிழந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக கவனக்குறைவாக செயல்பட்ட தலைமை ஆசிரியர் முஹம்மது அமீன் மற்றும் மாத்திரையை விநியோகித்த ஆசிரியை கலைவாணி ஆகிய 2 பேரையும் பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.
இதே போல் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே, பள்ளிப்பட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளியில், வகுப்பறை பீரோவில் உள்ள சத்து மாத்திரைகளை மாணவிகள் எடுத்து சாப்பிட்டதாக கூறப்படுகிறது.
இதனால் ஆறாம் வகுப்பு படிக்கும் 6 மாணவிகளுக்கு மயக்கம் ஏற்பட்டதை அடுத்து, 5 பேர் பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையிலும், ஒரு மாணவி தர்மபுரி அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.