ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராகப் போராடிய சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவு தினம் இன்று கொண்டப்படுகிறது. ஆகஸ்ட் 20ம் தேதி சுதந்திரப் போராட்ட தியாகியின் அவரது 251வது ஆண்டு நினைவு தினம் ஆகும்.
இதனை தொடர்ந்து சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவு தினத்தையொட்டி எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இது தொடர்பாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, மாவீரன் பூலித்தேவனின் படைத்தளபதியாய் விளங்கி ஆங்கிலேயரை எதிர்த்துப் போர்புரிந்த சுதந்திர போராட்ட மாவீரர் ஒண்டிவீரன் 251-ஆவது நினைவு தினத்தையொட்டி இன்று சென்னை பசுமைவழிச்சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரனின் நினைவு தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.இதனை தொடர்ந்து அஞ்சல்தலை வெளியிட இந்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.