Site icon ITamilTv

அப்பா இடத்துல நீங்க இருக்கீங்க அண்ணா ! மேடையில் நெகிழ்ந்த கனி

Spread the love

திமுக பொதுக்குழு கூட்டம் சென்னையில் நடைபெற்றது. கட்சியின் தலைவராக மு.க.ஸ்டாலின்(mkstalin) தேர்வு செய்யப்பட்டார். மேலும், பொதுச் செயலாளராக துரைமுருகனும், பொருளாளராக டி.ஆர்.பாலுவும் துணை பொதுசெயலாளராகவும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

திமுகவின் 15வது உட்கட்சி பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது. ஒன்றிய, நகர, பேரூராட்சி, பேரூராட்சி, பகுதி, மாவட்ட, பேரூராட்சி செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் ஏற்கனவே நடத்தப்பட்டு, நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் 4 தணிக்கைக் குழு உறுப்பினர்கள் பதவிகளுக்கான வேட்புமனுக்கள் நேற்று அண்ணா வித்தியாலயத்தில் வரவேற்கப்பட்டன. திமுக தலைவர் பதவிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின்(mkstalin) 2வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்தார்.

அதேபோல், பொதுச்செயலாளர் பதவிக்கு துரைமுருகன் மற்றும் டி.ஆர். பொருளாளர் பதவிக்கு பாலுவும் மனு தாக்கல் செய்திருந்தார். தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் பதவிக்கு வேறு யாரும் மனு தாக்கல் செய்யவில்லை.

இந்நிலையில், திமுக தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் உள்ளிட்டோரை அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்வதற்கான கட்சியின் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10 மணிக்கு சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரே உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி Winx கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளராக டி.ஆர்.பாலு துணை பொதுச்செயலாளராக கனிமொழி எம்.பிஆகியோர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் ,பொதுக்குழு கூட்டத்தில் பேசிய கனிமொழி(kanimozhi speech), அண்ணா, கருணாநிதி ஏற்றிருந்த பொறுப்பை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2-வது முறையாக ஏற்று கொண்டு நம்மை வழிநடத்துகிறார். எந்த நேரத்திலும் கருணாநிதி தனது கொள்கையை விட்டு கொடுக்க மாட்டேன் என தனது வாழ்நாள் முழுவதும் இருந்து வருகிறார்.

பெரியார், அண்ணா கனவுகளையும் அவர் ஆட்சியில் நிறைவேற்றி காட்டினார். கருணாநிதி இறந்த பிறகு திமுகவில் வெற்றிடம் உருவாக வேண்டும் என கட்சியின் பரம்பரை பகைவர்கள் எதிர்பார்த்தனர். பகைவர்களின் சாம்ராஜ்யத்தை தகர்த்து வெற்றிடத்தில் காற்று போல் இல்லாமல், ஆழிப்பேரலையாக மு.க.ஸ்டாலின் எழுந்து நின்று அதனை சாதித்து காட்டியுள்ளார்.

அப்பா இல்லாத இடத்தில் உங்களை (மு.க.ஸ்டாலினை) வைத்து பார்க்கிறேன். நீங்கள் தேர்ந்தெடுக்கும் போராட்டங்கள் அனைத்திலும் எப்போதும் அணிவகுத்து அவர் பின்னால் நிற்பேன் என கூறினார்.


Spread the love
Exit mobile version