Site icon ITamilTv

நீங்க எல்லாம் ரோட்ல தான் ஓட்டுவீங்க! -நாங்க நடைமேடையிலேயே ஓட்டுவோம்ல! – வைரலாகும் சக்திமான் # tamilnews #bridge #maharashtra #highway #watch #video

Spread the love

ஏராளமான வாகனங்கள் நிரம்பி வழியும் சாலைகளில் வாகனம் ஓட்டுவது நிச்சயம் சவாலான வேலை தான்.இதனால் நாம் அடிக்கடி மக்கள் தங்கள் இலக்கை விரைவில் அடைய விசித்திரமான வழிகளை உருவாக்குகின்றனர்.சாலையில் நாம் பயணிக்கும் போது, பலரும் போக்குவரத்து விதிகளை மீறி தங்களது பயணத்தினை மிகவும் இயல்பாக மேற்கொள்கின்றனர்.

எதோ ஒரு சிலருக்குத்தான் போக்குவரத்து விதிகள் மீறப்படுவதை பார்த்து கோபம் கொள்வர். ஆனால் ஒருசிலர் செய்யும் செயல்கள் நமக்கு கோபத்தையோ அல்லது வருத்தத்தியோ ஏற்படுத்துவதைக் காட்டிலும், நகைச்சுவையை ஏற்படுத்தும். இந்த நிலையில் தான் மேம்பாலம் நடைபாதையில் ஆட்டோ கடக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://twitter.com/smileandraja/status/1560265415871172611?s=20&t=NUo365pMXVKQh7GYV4_6XQ

மும்பை – ஆமதாபாத் நெடுஞ்சாலைக்கு மத்தியில் கட்டப்பட்டுள்ளது. இந்த நடைமேம்பாலத்தில் படிக்கட்டுகள் இல்லை. பொது மக்கள் மிகவும் சிரமம் இல்லாமல் ஏற வசதியாக இருக்க வேண்டும் எனும் நோக்கில், நெடுஞ்சாலைத் துறையால் சாய்வு பாதை கொண்ட மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.

அதில் ஆட்டோ டிரைவர் ஒருவர் சாலையினை கடந்து செல்ல, சாலையின் குறுக்கே  க்க கட்டப்பட்டிருந்த நடைமேம்பாலத்தில் ஆட்டோவை ஓட்டிச் சென்ற வீடியோ கடந்த சில நாட்களாக சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இது குறித்து கவத்துறையினர் தெரிவிக்கையில்,”இந்த சம்பவம் எங்களுக்கு சமூக வலைத்தளத்தின் மூலமாக தெரியவந்தது.மேலும் இந்த மேம்பாலத்தின் அருகில் சிசிடிவி கேமெரா இல்லையென்றும்,இதனால் ஆட்டோ என்னை கண்டுபிடிப்பது கடினமாக உள்ளது என்று தெரிவித்தனர்.மேலும் இது பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.கூடிய விரைவில் அந்த ஆட்டோ டிரைவரை தேடிப் பிடித்து உரிய நடவடிக்கை எடுப்போம் என்று தெரிவித்துள்ளனர்.

மேலும் குறிப்பாக ஆபத்தை உணராமல் நடைமேம்பாலத்தில் ஆட்டோவை ஓட்டி சென்றவருக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் மறுபுறம் தங்களது சமூக வலைதளப் பக்கங்களில் லைக்குகளுக்காக நெட்டிசன்கள் பகிர்ந்து வருகின்றனர்.


Spread the love
Exit mobile version