Site icon ITamilTv

வரும் கூட்டத்தொடரில்.. “ஆளுநரை தாக்கிப் பேசாதீங்க..” -எம்.எல்.ஏ.க்களுக்கு கண்டிஷன் போட்ட முதலமைச்சர்!!

Spread the love

2023ஆம் ஆண்டின் முதல் தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது.
இந்த கூட்டத்தொடரின் உரையாற்றிய ஆளுநர் ‘முதல் கூட்டத்தொடர் என்பதால் அனைவருக்கும் புத்தாண்டு, பொங்கல் நல்வாழ்த்துகள்” என்று தெரிவித்து கொண்டு

தமிழக அரசின் கொள்கைகள் மற்றும் விளக்கங்கள், நலத் திட்டங்களின் நிலை தொடர்பாக கிட்டத்தட்ட 40 நிமிடங்கள் உரையாற்றிய ஆளுநர், வாசிக்க ஆரம்பித்தார். இதையடுத்து, உரை வாசித்து முடிக்கப்பட்டதும், அதன் தமிழாக்கத்தை பேரவைத்தலைவர் மு.அப்பாவு வாசித்தார்.

அதன் பின்னர் தான், சட்டசபை முதல் கூட்டத்திற்காக தமிழக அரசு தயார் செய்து கொடுத்த உரையில்,

65-வது பத்தியில் இருந்த ஆளுநர் வாசிக்க மறுத்த வார்த்தைகள்:

சமூகநீ்தி,சுயமரியாதை,அனைவரையும் உள்ளடக்கியவளர்ச்சி சமத்துவம்,
பெண்ணுரிமை,மதநல்லிணக்கம்,பல்லுயிர் ஓம்புதல்,பெரியார்,அண்ணல் அம்பேத்கர்,
பெருந்தலைவர் காமராசர்,பேரறிஞர் அண்ணா,முத்தமிழறிஞர் கலைஞர்,
திராவிட மாடல் ஆட்சி,தமிழ்நாடு அமைதிப் பூங்கா,போன்ற வார்த்தைகளை ஆளுநர் வாசிக்க மறுத்துவிட்டதாக தெரியவந்தது.

முதலமைச்சர் கண்டனம் :

இந்த நிலையில் தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை ஆளுநர் முறையாக படிக்கவில்லை என்றும் உரையில் ஆளுநர் சொந்தமாக சேர்த்துப்படித்த எதுவும் அவைக்குறிப்பில் இடம்பெறாது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் சட்டப்பேரவையில் அச்சிடப்பட்ட உரையை வாசிக்காமல் மரபை மீறி ஆளுநர் செயல்பட்டுள்ளார்.இதனை தொடர்ந்து ஆளுநர் பேசியது அவைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று பகிரங்கமாக தெரிவித்தார்.

மேலும் ஆளுநர் உரையை கண்டித்து தீர்மானம் கொண்டுவந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசிய கீதம் பாடும் முன்பே அவையை விட்டு பாதியில் ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியேறினார்.

மரபை மீறி  ஆளுநருக்கு கட்சி தலைவர்கள் கண்டனம்:

மரபை மீறி ஆளுநர் அவையிலிருந்து வெளியேறியதாக ராமதாஸ், திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன் ,மார்க்சிஸ்ட், விசிக ஆகிய கட்சி தலைவர்கள்   குற்றம்சாட்டி  ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளன.

இந்த நிலையில் நாளையும், நாளை மறுநாளும் ஆளுநர் உரை மீது விவாதம் நடைபெற உள்ளது . இதனை அடுத்து முதலமைச்சர் பதிலுரை என சட்டப்பேரவைக் கூட்டம் வரும் 13ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

மேலும் இது குறித்து திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய முதலமைச்சர், சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ.க்கள் யாரும் ஆளுநரை தாக்கிப் பேசக்கூடாது என அறிவுறுத்தினார்.

 


Spread the love
Exit mobile version