Site icon ITamilTv

அமைச்சருக்கே இந்த நிலைமையா? – 3 நாட்களாக வெள்ளத்தில் சிக்கிய திமுக அமைச்சர்!!

Spread the love

தூத்துகுடி மாவட்டம் ஏரல் பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்(anitha radhakrishnan) 3 நாட்களுக்கு பின் மீட்கப்பட்டார்.

தமிழகத்தில் தென் பகுதியில் வளிமண்டல கிழடுக்கு காரணமாக திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் கனமழை கொட்டித் பெய்தது.

தொடர்ச்சியாக பெய்த கனமழை காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் மற்றும் குளங்கள் நிரம்பி உடைப்பெடுத்து நகரப்பகுதி உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் வெள்ளம் சூழந்தது.இதனால் மக்களின் இயல்பு வாழ்கை பாதித்தது.

மேலும் தேசிய பேரிடர் மீட்பு படை, கடலோர காவல் படை மூலம் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவு மற்றும் மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் ஏரல் பகுதி முழுவதும் மழை நீர் சூழப்பட்டு வெள்ளக்காடாய் மாறியது. அப்பகுதி மக்கள் தொலை தொடர்பு இல்லாமல் தவித்து வந்தனர். இந்த பகுதியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனும் இருந்தது தெரிய வந்தது.

சுமார் 3 நாட்களாக எந்த தொலை தொடர்பும் இல்லாமல், தண்ணீர் சூழ்ந்த நிலையில் சிக்கியுள்ள அவரை 3 நாட்களுக்கு பின் இன்று காலை தீயணைப்பு துறை அதிகாரிகள் மூலம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் அங்கி சிக்கிய பொது மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.


Spread the love
Exit mobile version