ITamilTv

”கரை ஒதுங்கும் கடல்பாசி..”கருப்பாக மாறிய கடல்..திருச்செந்தூரில் பரபரப்பு!!

Spread the love

திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி முருகன் கோவில் கடற்கரையில் குவியலாகக் கடற்பாசிகள் கரை ஒதுங்கி கடல் கருப்பாக மாறிய சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் மிகவும் புகழ் பெற்ற ஆன்மீக தலமான விளங்கும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உள்மாவட்டங்கள் மட்டுமே வெளிமாவட்டங்களிலிருந்தும் வந்து செல்கின்றன.

திருச்செந்தூர் சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடலில் நீராடி விட்டு சுவாமி தரிசனம் செய்வது வழக்கம்.இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்செந்தூர் கடல் சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியது.

உள்வாங்கிய கடல் இயல்பு நிலைக்குத்திரும்பாத நிலையில், தற்பொழுது ஆழ்கடலில் காணப்படும் கடற்பாசிகள் குவியல் குவியலாகக் கரை ஒதுங்கி வருகின்றன.

அதிக துர்நாற்றத்துடன் கரை ஒதுங்கும் இந்த கடற்பாசிகளால் பக்தர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் கடல் நீரில் நீராடிய பக்தர்கள் அனைவருக்கும் உடலில் அரிப்பு ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் குடும்பத்துடன் நீராட வந்த பக்தர்கள் கோவில் கடற்கரை பகுதியில் நீராடாமல் அருகில் உள்ள அய்யா வைகுண்டர் கோவில் கடற்கரையில் கடற்பாசிகள் இல்லாத இடத்தில்  நீராடிவிட்டுச் சென்றனர்.

மேலும் துர்நாற்றம் வீசப்பட்டுக் கரை ஒதுங்கும் கடற்பாசிகளால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்ட உள்ளன. உடனடியாக கரை ஒதுங்கி உள்ள கடற்பாசிகளை கோவில் நிர்வாகம் அப்புறப்படுத்த வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


Spread the love
Exit mobile version