ITamilTv

”500 மீ திடீரென உள்வாங்கிய கடல்..”சுனாமி எச்சரிக்கையா ? வேதாரண்ய மீனவர்கள் அச்சம்

Spread the love

வேதாரண்யம் சன்னதி கடல் அருகே  திடீரென 500 மீட்டர் வாங்கியதால் மீனவர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

நாகை மாவட்டம் வேதாரண்யம் சன்னதி கடல் பகுதியானது கோடியக்கரை  பகுதியில் பாக்ஜேலசந்தி சந்திப்பைச் சந்திக்கும் பகுதியாகும்.

கோடியகரையில் வன உயிரினங்கள் மற்றும் பறவைகள் சரணாலயம் உள்ளதால் நாள் தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்வார்கள்.

அந்த வகையில் கோடியக்கரை கடற்கரை மற்றும் வேதாரண்யம் கடற்கரைக்குச் சென்று பார்வையிட்டு ரசித்துச் செல்வது வழக்கம்.

இந்த நிலையில் இன்று திடீர் என்று சுமார் 500 மீட்டர் நீளத்திற்குக் கடல் உள்வாங்கியதால் அங்குள்ள மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர் .

இதே போல் அந்த பகுதிக்குச் சுற்றுலா வந்த சுற்றுலாப் பயணிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கடல் உள்வாங்கியதையும் பொதுமக்கள் ரசித்துக்கொண்டு போட்டோ எடுத்துக் கொண்டு சென்றனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து மீனவர்கள் தெரிவிக்கையில், கடந்த 2004 ஆம் ஆண்டு நடந்த சுனாமி சம்பவத்திற்குப் பிறகு கடல் பகுதிகளில் திடீரென கடல் உள்வாங்குவது மற்றும் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து வருவதாகவும் தெரிவித்தனர்.

இந்த நிலையில் இன்று சுமார் 500 மீட்டர் தூரத்திற்குக் கடல் உள்வாங்கியதால் பெரு பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

மேலும் 500 மீட்டர் கடல் உள்வாங்கியதால் அந்த பகுதியில் சேரும் சகதியுமாக  காட்சி அளிக்கிறது. மேலும் வேறு ஏதோ சம்பவங்கள் நிகழ்வு இருப்பதா போன்ற கேள்விகளளையும் , அச்சத்தையும் மீனவர்கள் மத்தியில் எழுப்பி உள்ளது.


Spread the love
Exit mobile version