Site icon ITamilTv

“இப்பவும் நான் Over Confident தான்; 2026-ல் ஆட்சியை பிடிக்கப்போறோம்” – அண்ணாமலை!

annamalai pressmeet

annamalai pressmeet

Spread the love

வாக்கு வங்கி அதிகமாகியிருப்பது ஒரு வகையில் வெற்றி.சரித்திரத்திலேயே வாங்காத வாக்குகளை பாஜக கோவையில் வாங்கி இருப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்த்து 40 \ 40 தொகுதிகளை கைப்பற்றி திமுக சாதனை படைத்துள்ளது.அதன்படி கோவை மக்களவை தொகுதியில் போட்டியிட்ட மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரிடம் தோல்வி அடைந்தார்.

இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, நேற்று நம்முடைய பிரதம மந்திரி திரு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் பேசும்போது நம்முடைய கட்சி அலுவலகத்தில் ஒரு விஷயத்தை தெரிவித்தார்.

நீங்கள் எந்த அளவிற்கு நாட்டு மக்களுக்காக உழைக்கின்றீர்களோ, அதைவிட அதிகமாக நான் உழைக்கப் போகிறேன். நீங்கள் 10 மணி நேரம் உழைக்கப் போகிறீர்கள் என்றால் நான் 18 மணி நேரம் உழைக்கப் போகிறேன்.. அடுத்து நம்முடைய இலக்கு தேர்தல் பிரச்சாரத்தின் பொழுது நாம் சொல்லி இருக்கக் கூடிய வளர்ச்சி அடைந்த பாரதம் அடுத்த நூறு நாட்களுக்கு நாம் வைத்திருக்கக்கூடிய வளர்ச்சி இலக்கு எல்லாம் கூட இந்த ஐந்து ஆண்டுகளில் நாங்கள் பூர்த்தி செய்வோம்.

இந்தியாவில் குறிப்பாக வறுமை என்பது கடந்த கால பேச்சாக மட்டுமே இருக்கும் அதற்காக நாங்கள் உழைப்போம் என்று பிரதமர் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். அதே நேரத்தில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி வளந்திருக்கிறது எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. மேலும் தேசிய ஜனநாயக கூட்டணியில் நாங்கள் மொத்தமாக சேர்ந்து வளர்ந்திருக்கிறோம். எங்கள் அனைவருக்கும் ஒரு எனக்கு இருந்தது இந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக பாராளுமன்ற உறுப்பினர்களை வைக்க வேண்டும் என்கின்ற இலக்கு இருந்தது.

இதையும் படிங்க: அண்ணாமலை என்ன தகுதி இருக்கு..? 2வது முறையாக நான்..- கனிமொழி கொடுத்த நச் பதில்!

அந்த இலக்கு எங்களால் அடைய முடியவில்லை என்பது எங்களுக்கு வருத்தமே நம்முடைய தலைவர்கள் எல்லாம் களத்தில் இருந்தார்கள் மிகக் கடுமையாக போராடினோம். ஆனால் இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினர்களை இந்த முறை அனுப்பி வைக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்த்தது நடக்கவில்லை. வாக்கு சதவீதம் அதிகமாக இருக்கிறது. மக்கள் எல்லா இடத்திலும் கூட பாரதக் கட்சிக்கு ஆதரவு கொடுத்திருக்கிறார்கள்.

நிச்சயமாக இதை ஒரு படிப்பினையாக எடுத்துக் கொண்டு அடுத்த நடக்க இருக்கக்கூடிய தேர்தலில் நிச்சயமாக பாரதிய ஜனதா கட்சி தேசிய ஜனநாயக கூட்டணி இங்கிருந்து எங்களுடைய வெற்றி வேட்பாளர் ஆக மாற்றி பாராளுமன்றத்திற்கு அனுப்பவும் என்று உறுதியை நாங்கள் எடுத்து இருக்கிறோம்.

இன்னும் கடினமாக உழைப்போம். ஏதாவது ஒரு இடத்தில் தவறு நடந்திருந்தால் அதை ஒரு வாரத்தில் பரிசீலனை செய்வோம். அதை இன்னும் எப்படி சிறப்பாக செய்திருக்க முடியும் என்ற யோசனை செய்து அதே நேரத்தில் மக்கள் கொடுத்திருக்கக் கூடிய தீர்ப்பை தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி பாரதிய ஜனதா கட்சி தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறோம். மக்கள் எப்பொழுதும் யோசித்து தான் ஒரு தீர்ப்பை கொடுப்பார்கள்.

எங்களுக்கு வாக்கு சதவீதத்தை அதிகப்படுத்த வேண்டும் என்று நினைத்து அதிகப்படுத்தி இருக்கிறார்கள். அது எம்பிக்களாக மாற்ற முடியவில்லை அதனை மாற்றுவோம் அதனால் மக்கள் கொடுத்திருக்க கூடிய தீர்ப்புகளை ஏற்றுக்கொண்டு இங்கே வெற்றி பெற்று இருக்க கூடிய 39

தமிழக மற்றும் புதுச்சேரியில் 1 என 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணியில் வெற்றி பெற்ற எங்களுடைய சகோதர சகோதரிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என தெரிவித்தார். மேலும் அவர்களுக்கு மத்திய அரசு அடுத்த ஐந்தாண்டு காலம் மோடி அவர்களுடைய அரசு அவர்களோடு இணைந்து தமிழகத்திலேயே பணியாற்றுவதற்கு ஒரு கட்சியாக நாங்கள் முழு ஒத்துழைப்பும் அரவணைப்பும் அவர்களுக்கு கொடுப்போம் காரணம் மோடி ஐயாயுடைய நலத்திட்ட பணிகள் தமிழக முழுவதும் வந்து சேர வேண்டும் என்பது எங்களுடைய ஆசை என்று தெரிவித்தார்.

மேலும் மற்றொரு முறை தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக தலைமையிலான இந்தி கூட்டணிக்கு எங்களது நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.பணம் கொடுக்காமல் நேர்மையாகத் தேர்தலை சந்தித்த நாம் தமிழர் கட்சியை பாராட்டுகிறேன் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் இப்பவும் நான் Over Confidentதான்; 2026-ல் ஆட்சியை பிடிக்கப்போறோம் என்று தெரிவித்தார்.


Spread the love
Exit mobile version