Site icon ITamilTv

”சூடுபிடிக்கும் கள்ளக்குறிச்சி விவகாரம்..” சிபிசிஐடி-க்கு நீதிமன்றம் கொடுத்த அதிரடி அறிவிப்பு!

kallakurichi death case

kallakurichi death case

Spread the love

kallakurichi death case -கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய உயிரிழப்பு தொடர்பாக, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட 11 பேரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கடந்த 18-ம் தேதி சட்டவிரோதமாக விற்கப்பட்ட கள்ளசாராயத்தை 100க்கும் மேற்பட்டோர் வாங்கி குடித்துள்ளனர்.

இதனால்,வாந்தி கண் எரிச்சல் தலை சுற்றல் உள்ளிய உபாதைகள் ஏற்பட்டதை அடுத்து கள்ளக்குறிச்சி விழுப்புரம் ,சேலம் மற்றும் புதுச்சேரி ஜிப்பர் மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்தில்6 பெண்கள் உட்பட 66 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 100-க்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரம் தமிழ் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: ”கள்ளக்குறிச்சி சம்பவத்தை நான் அரசியல் பண்ண விரும்பல..”ஆனா இங்க..- குஷ்புசொன்ன அதிர்ச்சி தகவல்!

தொடர்ந்து சின்னக்கண்ணு , ஜோசப் ராஜா , சின்னத்துரை உள்ளிட்ட குற்றவாளிகள் 21 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட பிறகு சிறையில் அடைக்கப்பட்டனkallakurichi death case.

மேலும் , 21 பேரில், அடைக்கப்பட்டுள்ள கன்னுக்குட்டி(எ) கோவிந்தராஜ், அவரது மனைவி விஜயா மற்றும் சின்னதுரை, நடுப்பையன், கதிரவன், கண்ணன், மாதேஷ், சக்திவேல், சிவக்குமார், பென்சிலால்,கௌதம்சந்த் ஜெயின் ஆகிய 11 பேரை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க, சிபிசிஐடி போலீஸார் கள்ளக்குறிச்சி நீதிமன்றத்தில் ஜூன் 28-ம் தேதி மனுத்தாக்கல் செய்திருந்தனர். அந்த மனு மீதான விசாரணை இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வலக்கை கேசரித்த நீதிபதி 11 பேரையும் சி.பி.சி.ஐ.டி போலீஸார் கள்ளக்குறிச்சி மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அதைத் தொடர்ந்து இன்று முதல் புதன்கிழமை மாலை வரை விசாரிப்பதற்கு நீதிபதி ஸ்ரீராம் உத்தரவிட்டார். அதோடு, போலீஸார் தீவிர விசாரணைக்காக 11 பேரையும் அழைத்துச் சென்றனர்kallakurichi death case.


Spread the love
Exit mobile version