Site icon ITamilTv

#BREAKING || கள்ளக்குறிச்சியில் ஓயாத மரண ஓலம்! – பலி 50ஆக உயர்வு

Kallakurichi Death

Kallakurichi Death

Spread the love

#BREAKING || கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50ஆக அதிகரிப்பு

கள்ளக்குறிச்சியில் விஷ சாராய குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ள சம்பவம் தேசிய அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கருணாபுரம் பகுதியில் கடந்த 18-ம் தேதி சட்டவிரோதமாக விற்கப்பட்ட விஷ சாராயத்தை வாங்கி 132 பேர் வாங்கி குடித்துள்ளனர்.

இதில், குடித்தவர்கள் அனைவருக்கும் வாந்தி கண் எரிச்சல் தலை சுற்றல் ஏற்பட்டதை அடுத்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, புதுச்சேரி ஜிப்மர், விழுப்புரம் முண்டியம்பாக்கம், சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் அடுத்தடுத்து உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்பட்டது.

இதையும் படிங்க: ”மெத்தனால் ரத்தத்தில் கலந்தால்..” வாழ்நாள் முழுவதும்.. – மருத்துவர்கள் எச்சரிக்கை!

தற்போதைய நிலவரப்படி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கருணாபுரத்தை சேர்ந்த வீராசாமி (40) என்பவர் சற்றுமுன் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி – 28 பேர்,
சேலம் – 15 பேர்,
விழுப்புரம் – 4,
புதுச்சேரி ஜிப்மர் – 3 என மொத்தம் இதுவரை 50 பேர் உயிழந்துள்ளனர் . மேலும் மருத்துவமனைகளில் 88 பேருக்கு தற்போது சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.


Spread the love
Exit mobile version