நீட் தேர்வுகளில் தொடர்ந்து குளறுபடிகள் நடந்து கொண்டு தான் இருக்கிறது என மா.சுப்பிரமணியன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் மருத்துவம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்காளை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ” நீட் மறுதேர்வு விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்தார்.
2021 ஆம் ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை பொறுத்த வரை 720 க்கு 720 எடுத்தவர் ஒருவர் மட்டுமே தேர்ச்சி பெற்றார். 2022 ஆண்டு முழுமையாக யாரும் எடுக்கவில்லை. அதே போல 2023 ஆண்டு 3 பேர் எடுத்து இருந்தனர்.
இந்த சூழலில் இந்தாண்டு நடத்த பட்ட நீட்தேர்வில் அதிகப்படியான மாணவர்கள் முழு மதிப்பெண் பெற்று இருப்பது சந்தேகத்தையும் , குளறுபடி நடந்து இருப்பதையும் காட்டியுள்ளது.
மேலும் நீட் குறித்து தேசிய தேர்வு முகமை,நீட் தேர்வில் 720/720மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கும், 718 மற்றும் 719 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் மதிப்பெண் இருந்தது சாத்தியம் இல்லாத ஒன்று ஏன் என்றால் 180 கேள்விகள் அடங்கியது தான் நீட் தேர்வு . ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு மதிப்பெண். ஒரு கேள்வியை தேர்வு செய்து பதில் அளிதால் நான்கு மதிப்பெண். அவர்கள் தவறுதலாக பதில் அளித்திருந்தால் அபராத மதிபெண்ணுடன் சேர்த்துக் 5 மதிப்பெண் , அவர்கள் பெற்ற மதிப்பெனில் இருந்து குறைந்து விடும்.
ஆகவே, அனைத்து கேள்விகளுக்கும் சரியான விடை அளித்திரந்தால்720 முழு மதிப்பெண் பெற முடியும். ஆனால் ஒன்று தவறாக இருந்தால் 716 மதிப்பெண் தான் பெற முடியும்..எப்படி 718 மற்றும் 719 மதிப்பெண்கள் த மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து பேசிய அமைச்சர்,” நீட் தேர்வில் கருணை மதிப்பெண் வழங்கியது மிகப்பெரிய மோசடி. உச்ச நீதிமன்றம் எந்த இடத்திலும் கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என தீர்ப்பு அளிக்கவில்லை. சட்டப்படிப்புக்கான நுழைவுத் தேர்வு தொடர்பான தீர்ப்பை நீட்-க்கு பயன்படுத்துவது சரியல்ல என்று தெரிவித்தார் .