Site icon ITamilTv

கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் 25 கிராமங்கள் இணைப்பு?.. முதல்வருக்கு அனுப்பிய பரபர கடிதம்!!

Spread the love

கள்ளக்குறிச்சி(kallakurichi) மாவட்டத்துடன் 25 கிராமங்களை இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வரும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்போம் என்று பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பேரங்கியூர், அரசூர், பெரியசெவலை, ஆனத்தூர், மடப்பட்டு, அரும்பட்டு, மாதம்பட்டு உள்ளிட்ட 25 கிராமங்களை கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

ஆனால் இதற்க்கு 25 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள்,கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.மேலும் 25 ஊராட்சி பொதுமக்கள் வரும் நாடாளுமன்றத் தேர்தலை புறக்கணிப்பதாக பேனர் வைத்துள்ளனர்.

அதில்,மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் 2 மு.க.ஸ்டாலின அவர்களின் கவனத்திற்குநாடாளுமன்ற தேர்தல் புறக்கணிப்பு,25 கிராம ஊராட்சி மக்களின் பணிவான கோரிக்கை விழுப்புரத்திற்கு மிக அருகில் 10 கி.மீ தொலைவில் 25 ஊராட்சிகள் உள்ளது விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியம்
உளுந்தூர்பேட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 1.பேரங்கியூர் 2.கரடிப்பாக்கம் 3.இருவேல்பட்டு 4.காரப்பட்டு 5.பொய்கைஅரசூர் 6.தி.குமாரமங்கலம் 7.மேல்தணியாலம்பட்டு 8.ஆனத்தூர் 9.சேமங்கலம் 10.அரசூர் 11.ஆலங்குப்பம் 12.தென்மங்கலம் 13.கிராமம் 14.கண்ணாரம்பட்டு 15.காந்தலவாடி 16.கருவேப்பிலைபாளையம் 17.சித்தானங்கூர் 18.கீரிமேடு 19.ஆனைவாரி 20.அரும்பட்டு 21.மாதம்பட்டு 22.சரவணம்பாக்கம் 23.பெரியசெவலை 24.ஆமூர் 25.டி.கொளத்தூர் ஆகிய ஊராட்சிகள் விழுப்புரத்திற்கு மிக அருகில் 10 கி.மீ தொலைவில் உள்ளது.

அலுவலகம் மற்றும் அதிகாரிகளை அனுகி எளிதாக பயன்பெற முடிகிறது.
எங்களுக்கு விழுப்புரம் மிக அருகில் உள்ளதால் மகிழ்ச்சியுடன் உள்ளோம்
சிலரின் சூழ்ச்சியால் 75 கி.மீ தொலைவில் உள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் எங்களது கிராமங்களை இணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை பொதுமக்களாகிய நாங்கள் விரும்பவில்லை கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்கும் முயற்சி மக்களுக்கு எதிராகவும்
மக்கள் விருப்பத்திற்கு எதிராகவும் இந்தபகுதி மக்களின் வளர்ச்சிக்கு தடையாகவும் உள்ளது.

எனவே மாண்புமிகு தமிழக முதலமைச்சர், மாண்புமிகு அமைச்சர், உயர்திரு. மாவட்ட ஆட்சியர் உயர்திரு. சட்டமன்ற உறுப்பினர் ஆகியோர் மக்களின் கோரிக்கையினை ஏற்று இப்பகுதியினை கள்ளக்குறிச்சி மாவட்டத்துடன் இணைக்கும் முயற்சியினை கைவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

இப்பகுதிகளை மக்களின் விருப்பத்திற்கு எதிராக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இணைத்தால் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணித்து அனைத்து குடும்ப அட்டைகளையும் அரசிடம் ஒப்படைக்கப்படும் மேலும் உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் போன்ற பல போராட்டங்கள் நடத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளனர்.


Spread the love
Exit mobile version