Site icon ITamilTv

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் :” NTK தனித்துப் போட்டி..” -சூடுபிடிக்கும் தேர்தல் களம்!

Vikravandi by-election

Vikravandi by-election

Spread the love

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டிவிடுவதாக அறிவித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவாக இருந்த புகழேந்தி, உடல்நலக்குறைவு காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 6ம் தேதி உயிரிழந்தார். இதையடுத்து ஏப்ரல் 8ம் தேதி விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது .

இந்நிலையில் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறும் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் ஜூலை 10-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு இடைத்தேர்தல் தேதியை அறிவித்தது இந்திய தேர்தல் ஆணையம்..!!

ஜூன் 14-ம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி, வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசிநாள் ( Vikravandi ) ஜூன் 21-ம் தேதி முடிவடையும் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

மேலும் மனுக்கள் மீதான பரிசீலனை ஜூன் 24ஆம் தேதி நடைபெற உள்ளது. வேட்பு மனுக்களை வாபஸ் பெற ஜூன் 26 ஆம் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ,விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டிவிடுவதாக அறிவித்துள்ளது.மக்களவைத் தேர்தலில் 8.2% வாக்குகளை பெற்று மாநில கட்சி என்ற அந்தஸ்து பெற்ற பின் நாம் தமிழர் கட்சி களம் காணும் முதல் தேர்தல் இது.

எனவே இந்த தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.இதனால் தேர்தல் களம் சூடுபிடிக்க துடங்கியுள்ளது.


Spread the love
Exit mobile version