Site icon ITamilTv

மறுபடியும் முதல்ல இருந்தா..? அலறும் பொதுமக்கள்.. தமிழ்நாடு வெதர்மேன்!!

Spread the love

மிக்ஜாம் புயலைத் தொடர்ந்து மீண்டும் ஒரு புயல் அடுத்த வாரம் சென்னையை தாக்க உள்ளதாக ஒரு தகவல் பரவி வரும் நிலையில், இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் விளக்கமளித்துள்ளார்.

கடந்த 4ஆம் தேதி மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால், தலைநகர் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கியது.

கனமழையால் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து பொதுமக்கள் பெரும் துயரத்திற்கு ஆளாகினர். இந்நிலையில், பலத்த காற்றுடன் பெய்த கனமழையால் அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க உடனடியாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

தற்போது, மாநகராட்சி ஊழியர்களும், தூய்மைப் பணியாளர்களும், தேசிய பேரிடர் மீட்பு படையினர் இரவு பகல் பாராமல் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால் மெல்ல மெல்ல தலைநகர் சென்னை இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறது.

அந்தவகையில், சென்னையில் 80 சதவீத இடங்களில் மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. தண்ணீர் தேங்கிய வடசென்னை மற்றும் புறநகரில் ஒரு சில இடங்களில் இன்னும் வெள்ளம் வடியாமல் இருப்பதால் மின்சாரம் வழங்கவில்லை என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, அடுத்த வாரத்தில் சென்னையை நோக்கி அடுத்த புயல் உருவாக உள்ளதாக செய்திகள் வெளியான தகவல் பொதுமக்கள் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பரவி வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்..

“சென்னையை நோக்கி அடுத்த வாரம் புதிய புயல் உருவாகியுள்ளதாக உலா வரும் வதந்தி அடிப்படையற்றது. இதுபோன்ற தகவல்களை நம்ம வேண்டாம். அரபிக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை 10ம் தேதி இருக்கலாம். ஆனால், அதனால் சென்னைக்கு பாதிப்பு ஒன்றுமில்லை” என தெரிவித்துள்ளார்.


Spread the love
Exit mobile version