Site icon ITamilTv

NIA Raid-”கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம்..” தமிழகம் முழுவதும் 27 இடங்களில் NIA Raid!

NIA Raid

NIA Raid

Spread the love

NIA Raid-தமிழ்நாட்டில் சென்னை, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 27-க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை கார் குண்டு வெடிப்பு:

கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 23ம் தேதி கோவை உக்கடம் பகுதியில் கோட்டை ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள சங்கமேஸ்வரர் கோயில் முன்பு கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது.

இந்த சம்பவத்தில் காரை ஓட்டி வந்த என்பவர் ஜமீஷா முபீன் என்பவர் உயிரிழந்தார்.இது நாடுமுழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த வழக்கை தமிழக அரசு தேசிய புலனாய்வு முகமை விசாரிக்க பரிந்துரை செய்தது. இதனையடுத்து மத்திய அரசு NIA விசாரிக்க உத்தரவிட்டது.

தற்பொழுது இந்த வழக்கை என்ஐஏ அதிகாரிகள் விசாரித்து மேற்கொண்டத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தினர் .

அப்போது அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில்,இந்த வழக்கு தொடர்பாக மொத்தம் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை தொடந்து கர்நாடக மாநிலம் மங்களூரில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடிப்புச் சம்பவம் நடந்தது.

இதையும் படிங்க: Kodanadu Estate Case-”கோடநாடு எஸ்டேட் வழக்கு தள்ளிவைப்பு..” காரணம் இதுதான்!

மேலும் கார் வெடிப்புச் சம்பவம் தீவிரவாத சதிச்செயல் என விசாரணையில் தெரியவந்தது. ஆனால், எந்த தீவிரவாத அமைப்பும் இச்சம்பவத்துக்கு பொறுப்பு ஏற்கவில்லை.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் சென்னை, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் 27-க்கும் மேற்பட்ட இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

NIA அதிகாரிகள் சோதனை:

தடை செய்யப்பட்ட இயக்கங்களுடன் தொடர்பு இருக்கிறதா என்ற சந்தேகத்தின் அடிப்படையில், கோவையில் உக்கடம்,

கரும்புகடை,போத்தனூர் உள்ளிட்ட 12 இடங்களில் காலை 6 மணி முதலே என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த ரியாஸ் அக்ரம், பெரம்பூரைச் சேர்ந்த முகமது அப்துல்லா ஆகியோரின் வீடுகளிலும்,

சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த ஜாபர் அலி, பல்லாவரத்தைச் சேர்ந்த நவாஸ் ஆகியோரின் வீடுகளிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர்.

இதையும் படிங்க: https://x.com/ITamilTVNews/status/1756174635488641165?s=20

இதனிடையே, மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே காஜிமார் தெருவில் முகமது இப்ராஹீம் என்பவரின் வீட்டிலும்,

நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் உள்ள பழனிபாபா அரசியல் எழுச்சி இயக்கத்தின் மாநில இளைஞரணி செயலாளர் பக்ருதீன் அலி அகமது வீட்டிலும் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே மங்கலம்பேட்டை என்ற பகுதியில் சுலைமான் என்பவரது வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் இவர் வீட்டில் ஏற்கனவே சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தே போல, திருச்சி மற்றும் தென்காசி மாவட்டங்களிலும் என்ஐஏ அதிகாரிகள் தொடர் சோதனையில்(NIA Raid) ஈடுபட்டு வருகின்றனர்.

PUBLISHED BY : S.vidhya


Spread the love
Exit mobile version