Site icon ITamilTv

”அத்துமீறும் NLC..” கதறும் வளையமாதேவி கிராம மக்கள்..300-க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு!!

Spread the love

என்எல்சி இரண்டாவது சுரங்க விரிவாக்கம் பணி விவசாய நிலத்தை கையகப்படுத்த கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் 300-க்கும் மேற்பட்ட போலீசார் வளையமாதேவி கிராமத்தில் குவிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெய்வேலி என்எல்சி நிறுவனம் இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிக்காக நெய்வேலி அதன் சுற்றுவட்டார பகுதியான வளையமாதேவி,கீழ் வளையமாதேவி,கரிவெட்டி,கத்தாழை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாய நிலங்களை கையகப்படுத்தி வருகிறது.

இதற்கு கிராம மக்கள் முழுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.நிரந்தர வேலையும் உரிய இழப்பீடும் வழங்க கோரிக்கை வைத்து பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் பேரில் என்எல்சி நிறுவனம் வளையமாதேவி கிராமத்தில் கிடப்பில் போடப்பட்ட தூர்வார்பணிகளை ஆரம்பிக்க திட்டமிட்டு பணிகளை மேற்கொள்ள கனரக வாகனங்கள், ஜேசிபி எந்திரங்களை கொண்டுவந்து பணிகளை துவங்கினர்.

இதற்கு விவசாயிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.இதனைத்தொடர்ந்து மாவட்ட கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில்300 க்கு மேற்பட்ட போலீசார் அந்த பகுதியில் குவிக்கப்பட்டனர்.

மேலும் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாதவாறு சேத்தியாதோப்பு குருக்கு ரோடு பகுதியில் பேரிங் கார்ட் போட்டு போலீசார் வாகனங்களை சோதனைக்குப் பிறகு அனுப்பி வந்தனர்.இந்நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் தங்களை வானமாதேவி கிராமத்தில் உள்ளே அனுமதிக்காததால் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களை போலீசார் கைது செய்து அருகே உள்ள தனியார் மண்டபத்தில் அடக்கி வைத்தனர் இதனால் அப்பகுதியில் மேலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதனால் அப்பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது


Spread the love
Exit mobile version