Site icon ITamilTv

16 வயது சிறுமி.. பற்களை உடைத்து சித்ரவதை – சிக்கிய ராணுவ அதிகாரி!!

Spread the love

அசாமில், ராணுவ அதிகாரியும், அவரது மனைவியும் சேர்ந்து 16 வயது சிறுமியை வீட்டு வேலைக்‍கு அழைத்துச் சென்று கொடூரமாக சித்ரவதை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தில் தனது மனைவியுடன் வசித்து வரும் ராணுவ அதிகாரி ஒருவர் அவரது வீட்டில் 16 வயது சிறுமியை வேலைக்கு அமர்த்தியுள்ளார். அன்று முதலே சிறுமிக்கு சாப்பாடு கூட கொடுக்காமல் தொடர்ந்து ராணுவ அதிகாரியும் அவரது மனைவியும் சித்ரவதை செய்து வந்துள்ளனர்.

அங்கு வேலை செய்து வந்த அந்த சிறுமியின் பற்களை உடைத்தும், நாக்கில் கத்தியால் குத்தியும் அந்த தம்பதி கொடுமைப்படுத்தி உள்ளனர். மேலும், கொடுமையின் உச்சமாக சிறுமி உணவு கேட்டும்போது, குப்பை தொட்டியில் இருந்து சாப்பிட சொல்லி கட்டாயப்படுத்தி உள்ளனர்.

சிறுமியின் உடைகளை அவிழ்த்து கொடூரமாக தாக்‍கி காயப்படுத்தி வந்துள்ளனர். இப்படி தொடர்ந்து 6 மாதங்களாக தொடர் சித்ரவதை அனுபவித்து வந்த சிறுமி ஒரு வழியாக அவர்களிடம் இருந்து தப்பித்து பெற்றோரிடம் வந்து சேர்ந்துள்ளார்.

அதன் பின்னர், அங்கு நடந்த சம்பவத்தை பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதனையடுத்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இந்த புகார் தொடர்பாக போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சம்மந்தப்பட்ட ராணுவ அதிகாரி மற்றும் அவரது மனைவியையும் கைது செய்தனர். படுகாயமடைந்த அந்த சிறுமி தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


Spread the love
Exit mobile version