Site icon ITamilTv

7 தொகுதிகளில் 3-வது இடம் பிடித்து மாஸ் காட்டும் NTK! அதிர்ச்சியில் அதிமுக, பாஜக!

NTK 3rd place in 7 blocks

Spread the love

NTK 3rd place in 7 blocks : நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கையின் தற்போதை நிலவரப்படி 38 தொகுதியில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி முன்னிலையில் இருந்து வருகிறது.

அதேபோல் அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிக விருதுநகர் தொகுதியிலும், பாஜக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாமக வேட்பாளர் தருமபுரி தொகுதியிலும் முன்னிலையில் உள்ளனர்.

இதனிடையே 7 தொகுதிகளில் அதிமுக, பாஜகவை பின்னுக்கு தள்ளி நாம் தமிழர் கட்சி முன்னிலை வகிக்கிறது.

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி தொடங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற்றது.

இதையும் படிங்க : கோவை வாக்கு சாவடியில் ஒரே ஒரு வாக்கு மட்டுமே பெற்ற அண்ணாமலை – பாஜக நிர்வாகிகள் அதிர்ச்சி!

இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (04.06.24) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

தற்போதை நிலவரப்படி பாஜக மற்றும் அதன் கூட்டணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களான அண்ணாமலை, எல்.முருகன், தமிழிசை சௌந்தரராஜன், நயினார் நாகேந்திரன், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன் ஆகியோர் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகின்றனர்.

ஆனால், பெரும்பாலான இடங்களில் அதிமுகவை விட பாஜக 12க்கும் மேற்பட்ட தொகுதியில் 2வது இடத்தை பிடித்துள்ளது.

அதேபோல் தமிழகத்தில் உள்ள 7 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் 3 -வது இடத்தில் உள்ளனர் (NTK 3rd place in 7 blocks).

அதாவது, புதுச்சேரி, திருநெல்வேலி, கரூர், ஈரோடு, நாகை, நாமக்கல், கன்னியாகுமரி ஆகிய 7 தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி 3 -வது இடத்தில் உள்ளனர்.

இந்த தொகுதிகளில் அதிமுக, பாஜகவை பின்னுக்கு தள்ளி நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் முன்னிலை வகிக்கின்றனர்.


Spread the love
Exit mobile version