தமிழகத்தில்உடனடியாக ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளரும் ஆர் எம்ஆர் பேரவையின் தலைவருமான ராம் மோகன் ராவ் தெரிவித்துள்ளார்.
வீரபாண்டிய கட்டபொம்மனின் 224 -வது ஆண்டு நினைவு நாள்:
1799 -ல் செப்டம்பர் 1 – ம் தேதி ஆங்கிலேயப் படை பாஞ்சாலங்குறிச்சியின் மீது படையெடுத்து, வீரபாண்டிய கட்டபொம்மன் கோட்டையை கைப்பற்றியது. கட்டபொம்மன் புதுக்கோட்டை மன்னனிடம் அடைக்கலம் புகுந்தார். ஆனால், ஆங்கிலேயர்களுக்குப் பயந்து, புதுக்கோட்டை மன்னன் கட்டபொம்மனை காட்டிக் கொடுத்ததால், ஆங்கிலேயர்கள் கைது செய்தனர்.
1799 -ம் ஆண்டு அக்டோபர் 16 -ம் நாள் கயத்தாறு பகுதியில் வெள்ளையர்களால் தூக்கிலிடப்பட்டார். இந்திய விடுதலைப் போருக்கு வித்திட்ட மாவீரன் வீரபாண்டிய கட்டபொம்மனின் 224 -வது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
ஐயா ராம் மோகன் ராவ் மாலை அணிவித்து மரியாதை:
வீரபாண்டியன் கட்டபொம்மன் 224வது நினைவு நாள் முன்னிட்டு மதுரை பெரியார் சிலையில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மன் சிலைக்கு தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் ஆர்.எம்.ஆர் பேரவை தலைவர் ராம் மோகன் ராவ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் தென் மண்டல நிர்வாகி பிரபு மற்றும் ஆர்.எம்.ஆர் பேரவை நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம் மோகன் ராவ்..
இன்று வீரபாண்டிய கட்டபொம்மனின் 224 வது நினைவு நாளை முன்னிட்டு அவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன். தமிழகத்தில் உடனடியாக ஜாதி வாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் உடனடியாக தமிழக அரசு தலையிட வேண்டும் என்று அவர் கூறினார்.
LINK :https://fb.watch/nIFmHILcGb/