Site icon ITamilTv

ஓமன் கடலில் கவிழ்ந்த எண்ணெய் டேங்கர் – 13 இந்தியர்கள் உட்பட 16 மாயம்..!!

Oil tanker

Oil tanker

Spread the love

ஓமனின் தென்மேற்கு கடற்கரையில் டுக்ம் துறைமுகம் அமைந்துள்ளது. இது அந்த நாட்டின் எண்ணெய் மற்றும் எரிவாயு தொழில் சார்ந்த முக்கிய அங்கமாக திகழ்கிறது.

ராஸ் மத்ரகாவில் இருந்து கிளம்பிய ‘பிரெஸ்டீஜ் பால்கன்’ என்ற கப்பல், இந்த துறைமுகத்திற்கு வந்து கொண்டிருந்தது. துறைமுகத்திற்கு அருகே, கப்பலில் இருந்த எண்ணெய் டேங்கர் திடீரென கடலில் தலைகீழாக கவிழ்ந்தது.

Also Read : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் மேலும் ஒருவர் கைது..!!

இதில் எண்ணெய் டேங்கரில் பணியாற்றிய இந்தியர்கள் 13 பேர், இலங்கையை சேர்ந்த 3 பேர் என 16 பேர் மாயமாகியுள்ளனர். இதையடுத்து தற்போது மயமான பணியாளர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடலில் என்னை டேங்கர் தலைகீழாக கவிழ்ந்ததால் கப்பலில் இருந்த 16 பேரும் இறந்திருக்க கூடும் என அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது . இந்த கப்பல் 117 மீட்டர் நீளம் கொண்ட, குறுகிய கடல் பயணத்துக்காக 2007ல் வடிவமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Spread the love
Exit mobile version