Site icon ITamilTv

 complains: விரட்டியடித்த மகன்- கதறும் தாய்

complains

complains

Spread the love

தன்னை தனது மகன் தகாத வார்த்தைகளால் திட்டி வீட்டின் பூட்டை உடைக்க முயற்சிப்பதாக மாவட்ட எஸ்பி அலுவலகத்தில் மூதாட்டி சிசிடிவி ஆதாரத்துடன் மனு (complains) கொடுத்ததுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் அடியக்கமங்கலம் நடுத் தெரு பகுதியை சேர்ந்த இதயத்துல்லா என்பவரின் மனைவி தாஜின்னிஷா. 70 வயதான இவரது கணவர் சிங்கப்பூரில் வேலை பார்த்து வந்த நிலையில், கடந்த 1997ல் ஆம் ஆண்டு உயிரிழந்து விட்டார்.

இந்த நிலையில், அவர் தனது மூத்த மகள் கமர் நிசாவுடன் வசித்து வருகிறார். மூதாட்டியின் மகன் முஹம்மது அன்சாரி சிங்கப்பூரில் தற்போது பணிபுரிந்து வருகிறார். மேலும் சிங்கப்பூர் குடிமகனாகவும் அவர் இருந்து வருகிறார்.

தாஜின்னிஷா தனக்கு சொந்தமான சொத்து வீதத்தை தன்னை பராமரித்து வரும் தனது மூத்த மகள் கமர்நிஷாவின் பெயரில் தான் செட்டில் மெண்ட் எழுதி வைத்துள்ளார்.

இந்த நிலையில் சிங்கப்பூரில் இருந்து ஊருக்கு வரும் மகன் அடிக்கடி தாங்கள் குடியிருக்கும் வீட்டை தனக்கு கொடுக்குமாறு பிரச்சனை செய்வதாக கூறி உள்ளார். 70 வயதான தன்னை தாய் என்றும் பாராமல் தகாத வார்த்தைகளால் திட்டி அடித்து துன்புறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் மது அருந்திவிட்டு தானும் தனது மகளும் இருக்கும் வீட்டை உடைக்க முயற்சிப்பதால் இதனால் நிம்மதியாக வாழ முடியவில்லை என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடந்த பெட்டிஷன் மேளாவில் மனு கொடுத்துள்ளார்.

மது அருந்திவிட்டு தகாத வார்த்தைகளால் திட்டி தனக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி வரும் தனது மகன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தன்னை பாதுகாக்க வேண்டும் எனவும் நாங்கள் இங்கு வந்திருக்கும் நேரத்தில், அத்துமீதி சுவர் ஏறி குதித்து வீட்டை தனது மகன் வீட்டின் பூட்டை உடைத்து வருவதாக சிசிடிவி ஆதாரத்துடன் முறையிட்டு (complains) கோரிக்கை வைத்தார்.

இதையும் படிங்க : https://itamiltv.com/senthil-balaji-case-900-people-included-central-crime-branch-police-information/

இதனையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தொலைபேசி மூலம் அழைத்து பேசி நிகழ்விடத்திற்கு சென்று தனக்கு தகவல் தெரிவிக்கும்படி கூறினார்.

ஏற்கனவே இந்த சொத்து தொடர்பாக முகமது அன்சாரி திருவாரூர் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Spread the love
Exit mobile version