Site icon ITamilTv

செப் 28ந் தேதி சென்னையில் 20 ஆயிரம் ஆசிரியர்கள் குடும்பத்துடன் காலவரையற்ற போராட்டம்!!

Spread the love

வருகின்ற டிசம்பர் மாதத்தில் 28ந் தேதி சென்னையில் 20 ஆயிரம் ஆசிரியர்கள் குடும்பத்துடன் காலவரையற்ற போராட்டம் மதுரையில் இடைநிலை பதவி மூப்பு ஆசிரியர்கள் இயக்கம்பொதுச் செயலாளர் ராபர்ட் பேட்டியளித்துள்ளார்.

மதுரை – செப் 2 இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் மதுரை மாவட்டம் மற்றும் ஏழு வட்டாரங்களில் புதிய கிளைகள் தொடக்க விழா மதுரை காலேஜ் ஹவுஸ் உள் அரங்கத்தில் நடைபெற்றது

இவ்விழாவில் அனைத்து வட்டார பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் பதவியேற்பு மாநில தலைவர் ரெக்ஸ் ஆனந்தகுமார் தலைமையில், மாநில பொருளாளர் கி.கண்ணன் முன்னிலையில், மாநில பொதுச்செயலாளர் ஜெ.இராபர்ட் ஆகியோர் அனைத்து பொறுப்பாளர்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளையும் மதுரை மாவட்ட செயலாளர் குமரேசன் செய்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து மாநில பொதுச் செயலாளர் இராபர்ட் செய்தியாளருக்கு அளித்த பேட்டியில்..

இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் 9 வட்டாரங்களில்புதிய கிளைகள் இன்று தொடக்க விழா மதுரையில் தனியார் அரங்கில் நடைபெற்றது. எங்களது ஒற்றை கோரிக்கை எங்களுடன் பணி புரியும் சக இடைநிலை ஆசிரியர்கள் இணையாக சம வேலைக்கு சம ஊதியத்தைவழங்க வேண்டும் என்ற 10 ஆண்டுகளாக போராடி வருகிறோம்.

கடந்த கால போராட்டங்களில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் நேரில் வந்து திமுக ஆட்சி வந்தவுடன் உங்களோட கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றார்கள். அதன்படியே தேர்தல் அறிக்கையில் 3,11,20,000 இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என்று வாக்குறுதியும் கொடுக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகள் ஆகியும்பதவியேற்று எனது கோரிக்கை நிறைவேற்றப்படாததால் கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் காலை விற்ற போராட்டத்தை நடத்தினோம்.

சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கவலைக்கிடமாக மருத்துவமனையில் உள்ளனர் அடுத்து இந்த புத்தாண்டில் முதல் அறிவிப்பதாக தமிழக அரசுக்கு இடைநிலை ஆசிரியர்களுக்கு 2009 பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று நபர்கள் அடங்கிய ஊதிய குழு அமைக்கப்படும். அந்த அறிக்கை பெற்று என்னோட கோரிக்கையை நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதிகள் கொடுத்தார்கள்.

ஆனால், ஒன்பது மாதங்களாகியும் எங்களது கோரிக்கை இன்னும் நிறைவேற்றப்படாததால் நாங்கள் வரும் டிசம்பர் மாசம் 28ஆம் தேதி முதல் சென்னையில் உள்ள டிபிஐ 20 ஆயிரம் ஆசிரியர் குடும்பத்துடன் மீண்டும் காலவரையற்ற போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளோம். இந்த கோரிக்கையை நிறைவேறும் வரை எத்தனை இழப்புகள் ஏற்பட்டாலும் எங்களோட போராட்டம் ஓயாது. தமிழக முதல்வர் தலையிட்டு உடனடியாக இந்த கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் என்று நாங்கள் கேட்டுக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.


Spread the love
Exit mobile version