Thirumavalavan Speech- ”ஒரே நாடு ஒரே கலாச்சாரம் ஒரே மொழி ஒரே மதம்” என்கிற கொள்கைகளை முழங்கி இந்த நாட்டை பிளவுபடுத்துவதற்கான அனைத்து வேலைகளையும் பாஜக செய்வதாக திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் திருமாவளவன் வலியுறுத்திய கோரிக்கைகள் வைத்து பேசியது பின்வருமாறு:
ஜிஎஸ்டி சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பின் மூலம் பல்வேறு வகையில் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். மாநில அரசுகள் இதனால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டிருக்கிறது.
ஜிஎஸ்டி வரி இழப்பால் மாநில அரசுகளுக்கு ஏற்பட்ட வரி இழப்பை ஈடு செய்வதற்கு இழப்பீடு தருவதாக சொல்லி அது 2020 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டு விட்டது.
இதனால் மாநில அரசுகள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றன. மேலும் கூடுதலாக செஸ் மற்றும் சர்ச்சார்ஜ் போன்ற வரி விதிப்பை விதித்து அதன் மூலம் மாநில அரசுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது.
எனவே, இந்திய ஒன்றிய அரசு ஜிஎஸ்டி வரி விதிப்பை திரும்ப பெற்றுக் கொண்டு மாநில அரசுகளோடு கலந்து பேசி மாற்று வகையிலான வரி விதிப்பு முறையை அறிமுகப்படுத்த வேண்டும் இன்று நான் இங்கே மீண்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
நிதிப் பகிர்வு குறித்து நிதிக் குழு பரிந்துரை செய்து வருகிறது. 14வது நிதிக்குழு மாநில அரசுகளுக்கு 42 சதவீதம் நிதியை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று கூறியது.
15வது நிதிக் குழு மாநில அரசுகளுக்கு 41% மொத்த வரி வருவாயில் நிதியை பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று பரிந்துரைத்து இருக்கிறது .
ஆனால் மொத்த வரி வருவாயில் இன்று indivisible taxes என்கிற அந்த வரியை இந்திய ஒன்றிய அரசு முழுமையாக எடுத்துக் கொண்டு எஞ்சிய வரி வருவாயில் 35 சதவீதம் 14வது நிதிக் குழு,
30 சதவீதம் 15வது நிதிக் குழு என்கிற அடிப்படையில் மாநிலங்களுக்கு நிதியை பகிர்ந்து அளித்து இருப்பது மிகப்பெரிய மோசடியாகும் ஓரவஞ்சனையாகும்.
இதையும் படிங்க: OPS Statement-”அதிமுக கூட்டணி..”அமித்ஷாவின் பெருந்தன்மைங்க..-ஓபிஎஸ் நெகிழ்ச்சி!
குறிப்பாக, மாநில அரசுகள் தங்களுடைய தற்சார்பை இழந்திருக்கக் கூடிய நிலையில் 75 விழுக்காடு அந்த வரி வருவாயில் அவர்களுக்கு நிதியை பகிர்ந்து அளிப்பதற்கு ஏற்ற வகையில்,
அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என்ற தீர்மானங்களை நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம்.
அதை மீண்டும் நான் இங்கே பதிவு செய்ய கடமைப்பட்டிருக்கிறேன்.வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்குப்பதிவு எந்திரங்களில் ஒப்புகை சீட்டு 100% இணைக்கப்பட வேண்டும்.
இதையும் படிங்க:https://x.com/ITamilTVNews/status/1755552496943259821?s=20
அதனை எண்ணி முடித்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட வேண்டும் என்ற தீர்மானம் மிக முக்கியமானதாகும்.
அதை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்று நான் இந்திய ஒன்றிய அரசுக்கு வேண்டுகோளாக விடுக்க கடமைப்பட்டிருக்கிறேன்.
ஒரே நாடு ஒரே கலாச்சாரம் ஒரே மொழி ஒரே மதம் என்கிற கொள்கைகளை முழங்கி இந்த நாட்டை பிளவுபடுத்துவதற்கான அனைத்து வேலைகளையும்
இந்திய இன்றைய ஆட்சியாளர்கள் செய்து வருகிறார்கள் என்பது வேதனை அளிக்கிறது என்று (Thirumavalavan Speech) திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.
PUBLISHED BY : S.vidhya