ITamilTv

“MGR ஆக மாறிய ஓவிய ஆசிரியர்” வைரலாகும் கருப்பு எம்ஜிஆர் லாரன்ஸ் ஓவியம்!

kallakurichi ஓவிய ஆசிரியர்

Spread the love

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த சிவனார்தாங்கல் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பகுதிநேர ஓவிய ஆசிரியராக பணிபுரியும் மணலூர்பேட்டை சேர்ந்த சு.செல்வம் அவர்கள் நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்கள் சமூக சேவையை பாராட்டு விதமாகவும், பெருமைப்படுத்தம் விதமாக, கருப்பு எம்ஜிஆர் லாரன்ஸ் என்பதை குறிக்கும் விதமாகவும்..”MGR ஆக மாறி”, MGR கெட்டப்பில் ஓவிய ஆசிரியர் செல்வம் நடிகர் லாரன்ஸ் படத்தை வரைந்தார்.

தமிழ் திரையுலகில் நடன இயக்குனராக அறிமுகமாகி பல்வேறு முன்னணி நடிகர்களின் படத்தில் பணியாற்றி பிரபலமான ராகவா லாரன்ஸ், பின்னர் நடிகராகவும் ஒரு சில படங்களில் நடித்து கலக்கியவர்.

ராகவா லாரன்ஸ் திரைத்துறையில் மட்டும் பணியாற்றாமல், அவரது பெயரில் பல ஆசிரமங்களை நடத்தி வருகிறார், பல நற்பணிகளை மக்களுக்கு செய்து வருகிறார், பல பேரின் இதய அறுவை சிகிச்சைக்காக பண உதவிகளை செய்து வருகிறார், ஆதரவற்றோருக்கும், ஏழை குழந்தைகளுக்கும் நிறைய உதவிகளை செய்து வரும் நடிகர் ராகவா லாரன்ஸ் 13 மாற்றுத்திறனாளிக்கு புது ஸ்கூட்டிகளை வழங்கியுள்ளார்.

kallakurichi  ஓவிய ஆசிரியர்
kallakurichi ஓவிய ஆசிரியர்

இதையும் படிங்க: “மகளிர் இலவச பேருந்து பயணச் சீட்டில் முதல்வர் ஓவியம்” கள்ளக்குறிச்சி ஓவியர் அசத்தல்!

தற்போது “மாற்றம்” என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றைத் தொடங்கியுள்ளார். இதன் மூலம் பல ஏழை எளிய மக்கள் மக்கள் பயன் அடைந்து வருகிறார்கள்.நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களை மக்கள் அன்போடு “கருப்பு எம்ஜிஆர் லாரன்ஸ்” என்று அழைத்து கொண்டாடி வருகிறார்கள்..

இந்நிலையில் ஓவிய ஆசிரியர் செல்வம் அவர்கள் நடிகர் லாரன்ஸ் அவர்கள் சமூக சேவையை பாராட்டும் விதமாகவும்.. பெருமைப்படுத்தும் விதமாக.. “கருப்பு எம்.ஜி.ஆர் லாரன்ஸ்” என்பதை குறிக்கும் விதமாகவும்.. MGR ஸ்டைலில், ஓவிய ஆசிரியர் செல்வம் “MGR ஆக மாறி” கருப்பு எம்ஜிஆர் லாரன்ஸ் படத்தை நீர் வண்ணத்தைக் கொண்டு நான்கு நிமிடங்களில் வரைந்தார்.

இந்த ஓவியத்தை பார்த்த இளைஞர்கள், பொதுமக்கள் கருப்பு MGR லாரன்ஸ் படத்தை வரைந்த சிவப்பு எம்ஜிஆர் என்று ஓவிய ஆசிரியர் செல்வத்தை பாராட்டினார்கள்.


Spread the love
Exit mobile version