ITamilTv

இந்திய எல்லையில் பாகிஸ்தான் திடீர் தாக்குதல் – இந்தியா பதிலடி

Spread the love

இந்திய எல்லையில் பாகிஸ்தான் நேற்று இரவு திடீர் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

பாகிஸ்தானுடனான சர்வதேச எல்லைப்பகுதியில் இந்திய எல்லைப் பாதுகாப்புப்படையினர் தீவிர பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ஜம்முவின் அரினா செக்டார் பகுதியில் சர்வதேச எல்லையில் இந்திய எல்லைப்பாதுகாப்புப்படையினர் நேற்று வழக்கமான பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

அப்போது, நேற்று இரவு 8 மணியளவில், எல்லையில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கிச்சூடு மற்றும் சிறிய ரக பீரங்கிகளை வீசி பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது.

எல்லையில் பாகிஸ்தான் நடத்திய இந்த தாக்குதலில் பாதுகாப்புப்படை வீரர் படுகாயமடைந்தார். அவர் உடனடியாக மீட்கப்பட்டு ஜம்முவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


எல்லையில் உள்ள இந்திய நிலைகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் திடீர் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இந்தியா இந்த தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்தியது. இதனால், எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.


Spread the love
Exit mobile version