கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கெரிகேப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, தரமான கல்வி மற்றும் மாணவர்களின் அனைத்துத் திறன்களையும் மேம்படுத்தும் முயற்சிகள் மூலம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
Also Read : மாணவிக்கு பாலியல் தொல்லை – விடிய விடிய மாணவர்கள் போராடியதால் ஒப்பந்த ஊழியர் கைது..!!
1962ல் தொடங்கப்பட்ட இப்பள்ளி, கடந்த 5 ஆண்டுகளாக தலைமை ஆசிரியர் வீரமணி தலைமையின் கீழ் புதிய உயரங்களை நோக்கி பயணித்து வருகிறது. அவர் கல்வித்துறை, உள்ளாட்சித்துறை, உள்ளூர் பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மைக் குழு மற்றும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் பள்ளியின் உட்கட்டமைப்பு, மாணவர்களின் கல்வித்தரம் மற்றும் கூடுதல் திறன்களை மேம்படுத்தும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.
கணினி பயிற்சி, அபாகஸ் பயிற்சி, சிலம்பம் பயிற்சி, சதுரங்கப் போட்டி, இசை நடனப் பயிற்சி, கையெழுத்துப் பயிற்சி, ஸ்போக்கன் இங்லீஷ் பயிற்சி, தலைமைத்துவம் பயிற்சி, கோடைகாலப் பயிற்சி, விளையாட்டு போட்டிகளுக்கான பயிற்சிகள் என பல்வேறு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.