Site icon ITamilTv

Paris Olympics : பவானி தேவி தேர்வு

Paris Olympics

Paris Olympics

Spread the love

பாரிஸில் நடைபெற இருக்கும் Paris Olympics போட்டிகளில் வாள்வீச்சு பிரிவில் பங்கேற்பதறகான தகுதியினை பெற்றுள்ளார் தமிழகத்தை சேர்ந்த இந்திய வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி .

இந்த ஆண்டு பாரிஸ் நகரில் உள்ள மாபெரும் விளையாட்டு மைதானத்தில் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் கோலாகலமாக நடைபெற உள்ளது .

இதில் இந்தியா சார்பில் விளையாட ஒலிம்பிக் கமிட்டி அமைத்துள்ள தகுதி சுற்றுகளை கடந்து முன்னேற வேண்டும்.

இதையடுத்து இந்த தகுதி போட்டிகளில் வெல்ல இந்தியாவை சேர்ந்த வீரர் வீராங்கனைகள் முழு வீச்சில் தயாராகி வருகின்றனர் .

அந்தவகையில் தற்போது ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்ள வாள்வீச்சு தகுதி சுற்றில் தகுதி பெற்ற முதல் வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார் . பவானி தேவி.

இதற்கு முன் சீனாவில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் வாள் வீச்சுப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த பவானி தேவி வெண்கல பதக்கம் வென்று மாபெரும் சாதனை படைத்தார் .

ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர் ஆனார் பவானி தேவி.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் வாள் வீச்சுப் போட்டி நடைபெற்றது.

இதில் பெண்களுக்கான சாப்ரே பிரிவின் அரைஇறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பவானி தேவி, கஜகஸ்தான் நாட்டின் ஜாய்னாப் டேய்பெககோவாவை எதிர்கொண்டார் .

விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்ற இந்த போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த பவானி தேவி 14-15 என்ற புள்ளி கணக்கில் ஜாய்னாப்பிடம் போராடி வீழ்ந்தார்.

இருப்பினும் அரைஇறுதி வரை சென்றதால் புள்ளிகளின் அடிப்படியில் அவருக்கு வெண்கலப்பதக்கம் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .

இந்த வெற்றியின் மூலம் ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை பவானி தேவி படைத்தார்.

Also Read : https://itamiltv.com/actress-rambha-tearful-tribute-to-the-captain/

இந்நிலையில் தற்போது நடப்பாண்டு பாரிஸ் நகரில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்கேற்க முதல் ஆளாக தகுதி பெற்றுள்ள பவானி தேவிவுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இதுநாள் வரை பல சாதனைகளை படைத்துள்ள பவானி தேவி Paris Olympics போட்டியில் பதக்கம் வென்று மீண்டும் ஒரு மாபெரும் சாதனை படைப்பாரா என்பதை நாம் காத்திருந்து பார்க்கலாம்.


Spread the love
Exit mobile version